Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 4, 2016

அமெரிக்க அதிபர் வேட்பாளராக ஹிலாரி தேர்வானதற்கு ஜெ.தான் காரணம்: - அதிமுக எம்எல்ஏ பேச்சால் சிரிப்பலை


ஹிலாரி கிளிண்டன் அமெரிக்க அதிபர் வேட்பாளராக தேர்வா னதற்கு முதல்வர் ஜெயலலிதாவே காரணம் என அதிமுக உறுப்பினர் ஏ.ராமு (குன்னூர்) பேசினார்.

சட்டப்பேரவையில் நேற்று வனம், சட்டம், நீதி மற்றும் சிறைச்சாலைகள் ஆகிய துறைகளின் மானியக் கோரிக் கைகள் மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது:

அமெரிக்க அதிபர் வேட் பாளராக ஹிலாரி கிளிண்டன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க வரலாற்றில் பெண் ஒருவர் அதிபர் வேட்பாளராக தேர்வாகி இருப்பது இதுவே முதல் முறை.

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த போது சென்னை வந்த ஹிலாரி கிளிண்டன், முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார். வரலாற்று முக்கியத் துவம் வாய்ந்த சந்திப்பாக இதை உலகம் புகழ்ந்து கொண்டிருக்கிறது.

இந்த சந்திப்பின்போது ஜெய லலிதாவின் ஆங்கிலப் புலமையை கண்டு ஹிலாரி வியந்தார். ஜெயலலிதாவின் ஆளுமைத் திறனை புரிந்துகொண்டார். ஜெயலலிதா கொடுத்த ஊக் கத்தினால் அவர் இன்று அமரிக்க அதிபர் வேட்பாளராக உயர்ந்துள்ளார்.

இவ்வாறு ராமு பேசினார். அப்போது எதிர்க்கட்சி வரிசையில் சிரிப்பலை எழுந்தது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.