August 28, 2016
இலங்கையில் காணாமல் போன தமிழர்களின் கதி என்ன? வைகோ கேள்வி
இலங்கையில் காணாமல் போன தமிழர்களின் கதி என்ன என்பதை அறிய ஐ.நா. மன்றமும் செஞ்சிலுவைச் சங்கமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் போரின்போது காணாமல் போன கவிஞர்கள், படைப்பாளிகள், கலைஞர்கள், விடுதலைப்புலிகள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டார்களா? சித்திரவதைக்கு ஆளாகி உள்ளனரா? என்பது கண்டறியப்பட வேண்டும் எனக் கோரியுள்ளார். ரகசியமாகச் சிறை வைக்கப்பட்ட விடுதலைப்புலிகளுக்கு ஊசி மூலமும், உணவில் மெல்லக் கொல்லும் நஞ்சு ஊட்டப்பட்டு, இதுவரை 107 பேர் உயிரிழந்திருப்பதாக வைகோ குறிப்பிட்டுள்ளார்.
அத்தகைய உயிர் ஆபத்தில் சிக்கி இருக்கின்ற போராளிகள் குறித்தும், காணாமல் போனவர்கள் கதி என்ன என்பதை அறியும் வகையிலும், அனைத்துலக அமைப்புகளான ஐ.நா.மன்றமும், செஞ்சிலுவைச் சங்கமும், மனித உரிமைகள் கவுன்சிலும் உரிய நடவடிக்கை எடுக்க, இந்திய அரசின் வெளியுறவுத் துறை மூலம் தமிழக அரசு அழுத்தம் தர வேண்டுமெனக் வைகோ கேட்டுக் கொண்டுள்ளார்.
இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி விசாரணை நடைபெறுவதற்கும், காணாமல் போனவர்கள் குறித்துத் தக்க நடவடிக்கை எடுப்பதற்கும் ஏற்ற வகையில் பான் கி மூன் செயல்பட வேண்டும் என்றும் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் காணாமல் போன தமிழர்களின் கதி என்ன? வைகோ கேள்வி
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 28, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 28, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.