Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 7, 2016

படிக்க அனுப்பிய குழந்தைகளை பைத்தியமாக்கிய ஜக்கி!: போலீஸ் ஏட்டு மகேந்திரன் புகார்அருள்குமார்



படிக்க அனுப்பிய குழந்தைகளை
பைத்தியமாக்கிய ஜக்கி!:
போலீஸ் ஏட்டு மகேந்திரன் புகார்
போலீஸ் ஏட்டு மகேந்திரன் புகார்
மதுரையில் உள்ள போலீஸ் ஏட்டு மகேந்திரனுக்கு இரண்டு மகன்கள். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இவர்கள் இருவரையும் கோவையிலுள்ள ஈஷா மைய பள்ளியில் படிப்பதற்காக சேர்த்துவிட்டார். அங்கே அந்த குழந்தைகளுக்கு படிப்பைவிடவும், பிரம்மச் சரியத்தையே போதித்துள்ளனர். இதனால் அந்த குழந்தைகளுக்கு உணவு கட்டுப்பாடு, வேலைப்பளு இருந்ததால் அந்த குழந்தைகள் பித்துப்பிடித்து போன மனநிலையில் உள்ளனர்.
காலை மாலை இருவேளையும் 500 தோப்புக்கரணம் போடவேண்டும் என்பது கட்டாயமாம். இப்படி உடல்ரீதியாக நிறைய துன்புறுத்தியதால்தான் அந்த குழந்தைகளின் மனநிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த குழந்தைகளுக்கு ஷாக் ட்ரீட்மெண்ட்டும் கொடுத்துள் ளார்கள் ஈஷா மையத்தினர். இதனால் அக்குழந்தைகள் மேலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நல்லபடியாக படிக்க வேண்டும் அனுப்பிவைக்கப்படும் குழந்தைகளை இப்படி சித்திரவதை செய்து பிரம்மச்சரியத்தை போதிக்கிறது ஈஷா மையம் என்பதை உணர்ந்த மகேந்திரன் , தன் இரு குழந்தைகளையும் மதுரைக்கே அழைத்து வந்துவிட்டார்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட தன் இரு குழந்தைகளையும் அழைத்துச்சென்று இன்று கோவை மாவட்ட ஆட்சியர் முன் வாக்குமூலம் அளித்து, ஈஷா மையத்தின் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தவிருக்கிறார் மகேந்திரன்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.