August 31, 2016
திருடனை அடித்து நிலத்தில் தரதரவென்று இழுத்து சென்ற போலீஸ்காரர் - சர்ச்சை வீடியோ!
மத்திய பிரதேச மாநிலத்தில் குவாலியர் ரெயில் நிலையத்தில் தினமும் நிறைய திருட்டு சம்பவங்கள் நடப்பதாக பயணிகளிடம் இருந்து புகார்கள் வந்தன.
இதையடுத்து குவாலியர் ரெயில் நிலையத்தில் கண்காணிப்பு பணியை ரெயில்வே போலீசார் தீவிரப்படுத்தினார்கள்.
இந்த நிலையில் குவாலியர் ரெயில் நிலையத்தில் பயணி ஒருவரிடம் பணத்தை திருடன் பிக்பாக்கெட் அடித்தான். அவனை ரெயில்வே போலீஸ்காரர் கையும் களவுமாக பிடித்தார்.
ஆத்திரம் தீரும் வகையில் அந்த திருடனை ரெயில்வே போலீஸ்காரர் அடித்து உதைத்தார். அடி தாங்க முடியாமல் அந்த திருடன் மயங்கி விழுந்தான்.
அதன் பிறகும் அந்த ரெயில்வே போலீஸ்காரர் கோபம் தீரவில்லை. அவனது சட்டையைப் பிடித்து தரதரவென இழுத்து சென்றார்.
தரையில் உடல் உரசி ரத்தம் வழிந்தோட அந்த திருடனை அவர் இழுத்துச் சென்றார். இந்த காட்சியை பயணி ஒருவர் செல்போனில் படம் பிடித்து வெளியிட்டார்.
ரெயில்வே போலீஸ்காரர் அந்த திருடனை தரதர வென்று இழுத்து செல்வதை ரெயில் நிலையத்தில் திரண்டிருந்த பயணிகள் யாரும் தடுக்கவில்லை. மாறாக எல்லோரும் வேடிக்கை பார்த்தபடி சென்றனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது. வீடியோ காட்சியாகவும் பலரால் பகிரப்பட்டது.
இதையடுத்து அந்த ரெயில்வே போலீஸ்காரரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு கிளம்பியது. உடனடியாக ரெயில்வே போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். திருடனை தரையில் போட்டு இழுத்துச் சென்ற போலீஸ்காரர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
திருடனை அடித்து நிலத்தில் தரதரவென்று இழுத்து சென்ற போலீஸ்காரர் - சர்ச்சை வீடியோ!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 31, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 31, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.