Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 27, 2016

சர்ச்சையை ஏற்படுத்திய சொகுசு காரை கேரள போலிசார் கைப்பற்றினர்!



கோவையில் இருந்து சுமார் 4 கோடி ரூபாய் பணத்துடன் கடத்தப்பட்டதாக சர்ச்சையை ஏற்படுத்திய சொகுசு காரை கேரள போலிசார் கைப்பற்றினர்.

கடந்த வியாழனன்று சென்னையில் இருந்து கேரளாவுக்கு நகைக்கடை ஊழியர்கள், 3 கோடியே 90 லட்சம் ரூபாய் பணத்துடன் சொகுசு காரில் சென்றுள்ளனர். அப்போது காரில் இருந்தவர்களை கீழே தள்ளிவிட்டு மர்மநபர்கள் பணத்துடன் காரை எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக நகை வியாபாரி அன்வர்சதா கொடுத்த புகாரின் பேரில் மதுக்கரை போலிசார் வழக்குப்பதிவு செய்து 4 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

கேரள மாநிலம் குழல்மன்னா என்ற இடத்தில் தமிழக பதிவு எண் கொண்ட சொகுசு கார் நிற்பதாக கேரள போலிசார் தெரிவித்தனர். இதனையடுத்து மதுக்கரை போலிசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனிடையே, நகைக்கடை ஊழியர்கள் கொடுத்த புகாரில் 3 கோடியே 90 லட்சம் ரூபாய் பணம் காணாமல் போனது குறித்து புகார் தெரிவிக்காதது ஹவாலா பணமா என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.