August 3, 2016
தற்கொலை செய்த மாணவன் நரேந்திர மோடிக்கு எழுதிய உறுக்கமான கடிதம்
மராட்டிய மாநிலத்தில் விவசாய கடனை திருப்பி செலுத்த முடியாத காரணத்தினால், இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மராட்டியத்தில் உள்ள யவத்மால் மாவட்டம், மார்வாடி கிராமத்தை சேர்ந்தவர் கோபால் ரத்தோடு(22). இவரது அப்பா வங்கியில் விவசாய கடன் வாங்கியுள்ளார். ஆனால் அதை திருப்பி செலுத்த முடியாததால், வங்கி அதிகாரிகள் அவர் மற்றும் அவரது தந்தை என இருவரையும் துன்புறுத்தியுள்ளனர்.
இதனால் மனமுடைந்த ரத்தோடு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு பின்னர் அவர் பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் ஒன்று எழுதியிருப்பது தெரியவந்துள்ளது.
அதில் சொத்துகள் வைத்திருப்பவர்களுக்குமட்டும் வங்கிகள் கடன் தருகின்றன, ஆனால் சொத்துக்கள் இல்லாத ஒருவருக்கு வங்கிகள் கடன் தர மறுக்கின்றனர்.
பணக்கார பையன் அனைத்து வகையான விளையாட்டுகள் விளையாடும் போது, எங்களைப் போன்று உள்ள விவசாயிகளின் பையன்கள் விளையாட முடியாதா?
ஒரு கல்லூரி பேராசிரியாரால் கூட பொறியியல் கட்டணத்தை கட்ட முடியாத போது, ஒரு விவசாயி மகனின் நிலையை நினைத்து பாருங்கள்.
மேலும் விவசாயிகளுக்கு குறைவான சதவீத மானியங்கள் தான் கிடைக்கிறது.
ஆட்டோ டிரைவர்கள் பொலிசாருக்கு ஏன் மாமூல் தர வேண்டும் ? எந்த வித விசாரணையின்றி பொலிசார் விவசாயிகள் மீது வழக்கு பதிவு செய்து வருகின்றனர் என உறுக்கமாக தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
இது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
தற்கொலை செய்த மாணவன் நரேந்திர மோடிக்கு எழுதிய உறுக்கமான கடிதம்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 03, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 03, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.