August 23, 2016
ஜெயலலிதாவை அம்மானு சொன்னா என்ன தப்பு? : கேட்டது திமுக கூட்டணி எம்.எல்.ஏ
தாலுகா அலுவலகத்தை, நெல்லை மாவட்டம் கடையநல்லூரை தலைமையிடமாகக் கொண்டு அமைக்க, தமிழக அரசு உத்தரவிட்டது.
இதனால், ”தாலுகா அலுவலகம் தந்த அம்மாவுக்கு நன்றி” என்று தொகுதி எம்.எல்.ஏ. சார்ந்த கட்சியைச் சேர்ந்த இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பாக நன்றி போஸ்டர் ஒட்டப்பட்டது. முஸ்லீம் லீக் கட்சி, திமுக கூட்டணிக் கட்சியில் இருப்பதால், அந்த போஸ்டர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த போஸ்டர் தொடர்பாக, பதில் அளித்த கடையநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. அபூபக்கர், “ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் தலைவரை அடைமொழி சொல்லித்தான் அழைக்கிறார்கள். திமுகவினர் தங்கள் தலைவர் கருணாநிதியை கலைஞர் என்று அழைக்கிறார்கள். அறிஞர் அண்ணாத்துரையை அண்ணா என்றுதான் அழைக்கிறோம்.
அதேபோல் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை பெரும்பாலானவர்கள் அம்மா என்று அடைமொழியுடன் அழைக்கிறார்கள். அம்மா என்பது நல்ல வார்த்தைதானே. அதனால் அவரை அம்மா என்று அழைப்பதில் தவறில்லை. கடையநல்லூருக்கு தாலுகா அந்தஸ்தும், தாலுகா அலுவலகமும் தந்ததற்காக நன்றி தெரிவிப்பது எங்கள் கடமை. அதில் அம்மாவுக்கு நன்றி என்று குறிப்பிட்டதில் எந்த தவறும் இல்லை” என்று கூறினார்.
ஜெயலலிதாவை அம்மானு சொன்னா என்ன தப்பு? : கேட்டது திமுக கூட்டணி எம்.எல்.ஏ
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 23, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 23, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.