August 30, 2016
சுவாதி கொலை; ராம்குமாரின் தாயார் தாக்கல் செய்த மனு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
சுவாதி படுகொலை வழக்கை, சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி, ராம்குமாரின் தாயார் புஷ்பம் தாக்கல் செய்ய மனு மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.
சென்னை சூளைமேட்டை சேர்ந்த மென் பொறியாளர் சுவாதி ஜூன் 24-ம் தேதி நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், செங்கோட்டை மீனாட்சி புரத்தை சேர்ந்த ராம்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், சுவாதி கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில், ராம்குமாரின் தாயார் புஷ்பம் மனுத்தாக்கல் செய்தார். அதில், சுவாதி கொலை வழக்கில் உண்மைக் குற்றவாளிகளை காப்பாற்றும் நோக்கில் விசாரணை அதிகாரி தேவராஜ் முயற்சிப்பதாக கூறியிருந்தார்.
இந்த வழக்கில் மோசமான புலன் விசாரணை நடப்பதால், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று மனுதாரர் மனுவில் தெரிவித்திருந்தார். இந்த மனு நீதிபதி பி.என். பிரகாஷ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், வழக்கில் சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என்று வாதிடப்பட்டது.
சுவாதி கொலை வழக்கில் விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாக நீதிமன்றத்தில் விளக்கம் அளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், விசாரணை தொடர்பான நிலை அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். அதன் பின்னர் வழக்கின் தீர்ப்பை நீதிபதி பிரகாஷ் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
சுவாதி கொலை; ராம்குமாரின் தாயார் தாக்கல் செய்த மனு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
Reviewed by மறத்தமிழன்
on
August 30, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
August 30, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.