August 30, 2016
கல்லூரி மாணவி அடித்து கொலை: முன்னாள் மாணவர் கைது
கரூரில் தனியார் கல்லூரி மாணவி சோனாலி என்பவர் கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டதில் முன்னாள் மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்லூரி வகுப்பறையில் புகுந்து 3ம் ஆண்டு மாணவி சோனாலியை முன்னாள் மாணவர் உதயகுமார் என்பவர் கட்டையால் தாக்கினார்.
தாக்குதலில் காயமடைந்த மாணவி மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாணவியை தாக்கிய உதயகுமார் கல்லூரிக்கு சரியாக வராததால் ஏற்கனவே இடைநீக்கம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருதலைக் காதல் காரணமாக மாணவி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. உயிரிழந்த மாணவி சோனாலி மானாமதுரையை சேர்ந்தவராவார்.
இந்நிலையில் மாணவி சோனாலி இறந்ததை அடுத்து தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகம் கல்லூரிக்கு 2 நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வகுப்பறையில் மாணவி தாக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
கல்லூரி மாணவி அடித்து கொலை: முன்னாள் மாணவர் கைது
Reviewed by மறத்தமிழன்
on
August 30, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
August 30, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.