August 20, 2016
பெண் நடனக் கலைஞரை பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்!
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள பிரபல ஹோட்டலில் பெண் நடன கலைஞர் ஒருவர் 8 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள பாந்த்ராவில் ‘பேரடைஸ்’(Paradise) என்னும் பிரபல ஹோட்டல் ஒன்று உள்ளது. அங்கு நடன கலைஞராக இளம்பெண் ஒருவர் வேலை பார்த்துவந்தார்.
நேற்று காவல் நிலையத்தில், அவரை 8 பேர் கொண்ட கும்பல் ஒன்று வலுக்கட்டாயமாக பாலியல் வன்புணர்வு செய்ததாக புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் விசாரணை செய்த போலீசார் ஹோட்டலில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராவை சோதனை செய்தனர். அதில் பாதிக்கப்பட்ட பெண் கூறிய 8 பேரின் உருவமும் பதிவாகியிருந்தது.
அதனை தொடர்ந்து போலீசார் அந்த 8 பேரையும் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் அனவரும் பிரபல நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் என்றும், ஹோட்டலில் குடித்துவிட்டு அங்கு நடனமடும் பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.
எனவே போலீசார் அந்த 8 பேர் மீதும் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
பெண் நடனக் கலைஞரை பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 20, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 20, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.