Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 9, 2016

இந்தி சமஸ்கிருத மொழிகள் திணிக்க அனுமதி அளிக்கப்பட மாட்டாது - கே.பி.அன்பழகன்!



தமிழகத்தில் இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகள் எக்காரணம் கொண்டும் திணிக்க அனுமதி அளிக்கப்பட மாட்டாது என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் சட்டப்பேரவையில் உறுதிபட தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று பள்ளிக்கல்வி, உயர்கல்வித்துறை மான்ய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினர் தங்கம்தென்னரசு, மத்திய அரசு புதிய கல்விக் கொள்கை வரைவு கொண்டு வந்துள்ளதாகவும், இந்த வரைவுக் குழுவில் முழுக்க முழுக்க அரசு அதிகாரிகள் மட்டுமே உள்ளதாகவும், கல்வியாளர்கள் யாரும் இடபெறவில்லை என்பதை சுட்டிக்காட்டினார்.
மேலும், இது குறித்த தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், மத்திய அரசு தற்போது புதிய கல்விக் கொள்கை வரைவின் சில உள்ளீடுகளை மட்டுமே தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்தார்.
அதுகுறித்து குறிப்பிட்ட காலத்திற்குள் தமிழக அரசு தன்னுடைய பதிலை மத்திய அரசுக்கு அனுப்பும் என்றும், அந்த பதில் மாநில அரசின் உரிமைகள் பாதிக்காத வகையில் இருக்கும் என்றும் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.
மேலும் இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகள் திணிப்பை எந்த வகையிலும் தமிழகம் அனுமதிக்காது என்று உறுதிபட தெரிவித்த அமைச்சர் கே.பி. அன்பழகன், சிறுபான்மையினர் நலனும் தமிழகத்தில் பாதுகாக்கப்படும் என்று குறிப்பிட்டார். இதே கருத்தை தாமும் வலியுறுத்துவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பெஞ்சமின் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்,  அரசின் நிலைப்பாட்டை வரவேற்பதாகவும், அதேவேளையில், மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை வரைவு தொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாட்டை  தனித் தீர்மானமாக சட்டப்பேரவையில் நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.