Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 9, 2016

மீண்டும் சர்சையில் சிக்கியது மேகி நூடுல்ஸ் - புழு, பூச்சிகள் இருந்ததாக பெண் பரபரப்பு புகார்



சென்னை: சென்னையில் பிரபல பல்பொருள் அங்காடி ஒன்றில் வாங்கப்பட்ட மேகி நூடுல்ஸில் புழு, பூச்சி இருந்ததாக மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது. சென்னை மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த ஜெனட் என்ற பெண் பிரபல பல்பொருள் அங்காடியில் மேகி நூடுல்ஸ் வாங்கியுள்ளார். அதனை சமைத்து சாப்பிட்ட போது உடல்நலம் பாதிக்கப்பட்டதால் சந்தேகமடைந்து மேகி நூடுல்ஸை பார்த்த போது அதில் புழு மற்றும் பூச்சிகள் இருந்தது. இச்சம்பவம் குறித்து மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானுக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார். மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளார். நெஸ்லே நிறுவனம் மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாகவும் அந்த பெண் கூறியுள்ளார். மேகி நூடுல்ஸில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட வேதி பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டதால் அதற்கு நாடு முழுவதும் தடை விதிக்கப்பட்டிருந்தது. பெரும் சட்டப்போராட்டத்திற்கு பிறகு மேகி நூடுல்ஸ் மீண்டும் விற்பனைக்கு வந்துள்ளது. இச்சூழலில் மீண்டும் அந்நிறுவனம் சர்ச்சையில் சிக்கியுள்ளது மேகி நூடுல்ஸ் பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.