August 4, 2016
உத்திரபிரதேசத்தில் தலித் ஆசிரியை ஒருவர் பாலியல் பலாத்காரம்
உத்திரபிரதேசத்தில் தலித் ஆசிரியை ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து அதனை வீடியோ எடுத்து மிரட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் பரில்லி மாவட்டத்தை சேர்ந்த தலித் ஆசிரியை ஒருவர் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த போது அவரை காரில் வந்த 3 பேர் வழிமறித்து காரில் கடத்தி சென்றனர். அப்போது அந்த பெண் உதவி கேட்டு கத்தியது. இதனால் 3 பேரும் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்நிலையில் கரும்பு தோட்டத்துக்குள் ஆசிரியை கொண்டு சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இதில் ஆசிரியை மயங்கி விழுந்துள்ளார். உடனே பெண்ணை அங்கேயே விட்டு விட்டு 3 பேரும் தப்பியோடிவிட்டனர். சற்று நேரம் பின் மயக்கம் தெளிந்த அந்த பெண் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரில் அவர்கள் கற்பழித்து, அதனை வீடியோ எடுத்து அதனை வெளியிடுவோம் என மிரட்டியுள்ளதாக புகார் தெரிவித்துள்ளார். கற்பழிப்பு தொடர்பாக 3 பேரையும் பிடிக்க பரில்லி போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்
உத்திரபிரதேசத்தில் தலித் ஆசிரியை ஒருவர் பாலியல் பலாத்காரம்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 04, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 04, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.