Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 19, 2016

இந்த ஓவியங்கள் உங்கள் படுக்கையறையில் உள்ளதா? உடனே அதை தூக்கி எறியுங்கள்..!



நம் வீட்டில் உள்ள நிறைய விஷயங்கள் நம் உடல் ஆரோக்கியம் மற்றும் உறவுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். நம் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பொருட்களும் நேர்மறை மற்றும் எதிர்மறை ஆற்றல்களை ஈர்ப்பவை. இதுவரை நாம் வீட்டின் செல்வத்தை அதிகரிக்க, வீட்டினுள் வைத்திருக்கக்கூடாத பொருட்களைப் பற்றி கண்டோம்.
இப்போது கணவன் மனைவி உறவுகளுக்குள் விரிசல்களை ஏற்படுத்தும் சில ஓவியங்கள் குறித்து காணப் போகிறோம். இந்த ஓவியங்கள் வீட்டின் படுக்கையறையில் இருந்தால், அவற்றை உடனே அப்புறப்படுத்த வேண்டும். சரி, இப்போது அந்த ஓவியங்கள் என்னவென்று காண்போம்.
உங்களுக்கு என்ன தான் குழப்பமான நவீன ஓவிய படங்கள் மிகவும் பிடித்திருந்தாலும், அதை வீட்டின் படுக்கை அறையில் வைக்காதீர்கள்.
அப்படி வைத்தால், அது தம்பதியருக்குள் இருக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்காமல், அவர்களை குழப்பத்துடனேயே இருக்க வைக்கும்.
இம்மாதிரியான ஓவியங்களை பெரும்பாலான வீடுகளில் காணலாம். இந்த ஓவியங்கள் படுக்கை அறையில் இருந்தால், அது தம்பதியர்கள் இருவரும் ஒரு பொய்யான மாஸ்க்கை அணிந்து பொய்யான வாழ்க்கை வாழ்வதற்கு வழிவகுத்து, உறவை பாழாக்கிவிடும்.
ஓவியத்தில் பலதார மணம் புரிந்த ஒரு ஆண் மற்றும் 4 அல்லது 5 பெண்கள் இருக்கும் படி இருந்தால், அம்மாதிரியான ஓவியங்களை படுக்கை அறையில் வைக்காதீர்கள்.
போர் காட்சி ஓவியங்களை படுக்கை அறையில் வைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மேலும் இறந்த சடலங்கள், குழந்தை அழுவது போன்ற அல்லது மக்கள் கூட்டமாக இறந்திருப்பது போன்ற ஓவியங்களையும் தவிர்க்க வேண்டும்.
வேட்டைக்காரர்கள் தங்கள் இரையைத் தேடுவது போன்ற அல்லது இரையை கொன்று அருகில் வைத்து சந்தோஷமாக இருப்பது போன்ற ஓவியங்கள், தம்பதிகளின் வாழ்க்கையில் பிரச்சனையைத் தான் அதிகரிக்கும். ஆகவே இம்மாதிரியான ஓவியங்களையும் தவிர்க்கக வேண்டும்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.