August 4, 2016
மலச்சிக்கல் தீர எளிய வழிகள் !
1-வாரம் ஒரு முறை எண்ணை தேய்த்து தலை முழுகுதல்.இது உடலில் உள் சூட்டை தணிக்கும்.மேலும் கண் பார்வை தெளிவாகும்.மூலாதார சூட்டையும் தணிக்கும்.
2 -தினமும் உணவில் ஏதாவது ஒரு கீரை வகையை சேர்க்கவும்.மேலும் தண்ணீர் நிறைய குடியுங்கள்.
3 -தினமும் பச்சை காய்கறிகள்,பழங்கள் ஏதாவது ஒன்றை உணவாக சேர்த்து வரவும். இதில் நார்ச்சத்து மிகுந்துள்ளது.
4 -இரவு உணவாக பாஸ்ட் புட் மற்றும் புரோட்டா போன்றவைகளை தவிர்த்து ஆவியில் வேகும் உணவான இட்லி,புட்டு,இடிஆப்பம் போன்றவைகளை உண்ணவும்.
இதனுடன் வாழைப்பழம் ஒன்றிரண்டு சாப்பிடலாம்.
மேற்கண்ட முறைகளை கடை பிடித்து வந்தால் மிக எளிதாக மலச்சிக்கல் பிரச்சினை தீரும்.உடலின் உள் சூடும் தணியும்.
சித்த மருந்துகளில் மலச்சிக்கலுக்கு மருந்து :
1- கடுக்காய் - விதை நீக்கி சதைப்பகுதி மட்டும்.
2 -நெல்லிக்காய் -விதை நீக்கி சதைப்பகுதி மட்டும்.
3 -தான்றிக்காய் - விதை நீக்கி சதைப்பகுதி மட்டும்.
இவைகள் மூன்றையும் ஒரே எடை அளவு எடுத்து இடித்து ஒன்று சேர்த்துக்கொள்ளவும்.
இதுவே "திரிபலா சூரணம்"எனப்படும்.இதனை இரவில் படுக்கும் போது அரை டீஸ்பூன் அளவு எடுத்து வெந்நீரில் கலந்து குடிக்கவும்.
இதனால் காலையில் மலம் இலகுவாக வெளியேறும்.வாத,பித்த,கப நாடிகள் சமநிலைப்படும்.உடலில் நோயெதிர்ப்பு சக்தி பெருகும்,இரத்தம் விருத்தியாகும்.
நன்றி !
Dr.அரவின் தீபன்..
மலச்சிக்கல் தீர எளிய வழிகள் !
Reviewed by மறத்தமிழன்
on
August 04, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
August 04, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.