August 22, 2016
சட்டப் பேரவையில் இருந்து திமுக, காங்கிரஸ், முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் வெளிநடப்பு
திமுக உறுப்பினர்கள் 79 பேரின் இடைநீக்க உத்தரவை ரத்து செய்ய சபாநாயகர் மறுத்ததைக் கண்டித்து, சட்டப் பேரவையில் இருந்து திமுக, காங்கிரஸ், முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள திமுக உறுப்பினர்கள், சட்டப்பேரவை வளாகத்திற்குள் வருவதைத் தடுக்கக் கோட்டை வாயில் முன் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இடைநீக்கம் செய்யப்படாத திமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவை வளாகத்திற்குள் கருப்பு துணி கட்டி வந்தனர்.
ஆனால் வாயில் கருப்பு துணி கட்டி இருந்தால் அது பேரவை விதிகளுக்கு முரணானது என்பதால், எதிர்கட்சி உறுப்பினர்கள் அறையில் கருப்புத்துணியை அகற்றிவிட்டு சென்றனர்.
இந்நிலையில் திமுக உறுப்பினர்கள் 79 பேரின் இடைநீக்க உத்தரவை ரத்து செய்ய சபாநாயகர் மறுத்ததைக் கண்டித்து, திமுக, காங்கிரஸ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர், காவல்துறை மானியக்கோரிக்கையும் அவர்கள் புறக்கணித்தனர்.
சட்டப் பேரவையில் இருந்து திமுக, காங்கிரஸ், முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் வெளிநடப்பு
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 22, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 22, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.