August 2, 2016
உத்தரபிரதேசத்தில் தாய்க்கும் மகளுக்கும் நிகழ்ந்த பாலியல் கொடுமைக்கு எதிராக கொந்தளிப்பு!
உத்தரபிரதேசத்தில் தாயையும், மகளையும் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கிய குற்றவாளிகளை 3 மாதத்திற்குள் பிடிக்காவிட்டால் ஒட்டுமொத்தமாக தற்கொலை செய்துகொள்வோம் என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மாநில அரசை எச்சரித்துள்ளனர்.
உத்தபிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த தாயும் மகளும் தேசிய நெடுஞ்சாலையில் வழிப்பறி கும்பலால் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
குற்றவாளிகளை பிடிக்க உத்தரபிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் போலீசாருக்கு 24 மணி நேரம் கெடுவிதித்திருந்தார். ஆனால் 6 குற்றவாளிகளில் 3பேர் மட்டுமே பிடிபட்டனர். அவர்கள் புலந்த்ஷாரில் உள்ள விரைவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 14 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
விதிக்கப்பட்ட கெடுவிற்குள் குற்றவாளிகள் அனைவரையும் போலீசார் பிடிக்காத நிலையில் உத்தரபிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எதிர்க்கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.
இதற்கிடையே பாலியல் கொடுமைக்கு உள்ளான பெண்களுடன் சம்பவத்தன்று காரில் பயணித்த அவர்களது உறவினர்கள் செய்தியாளர் நேற்று சந்தித்தனர். தங்களை தாக்கி பணத்தை கொள்ளையடித்து பாலியல் வன்கொடுமையை நிகழ்த்திய வழிப்பறிக்கும்பலின் அத்துமீறலை அவர்கள் எடுத்துரைத்தனர்.
குற்றவாளிகள் அனைவருக்கும் 3 மாதத்திற்குள் கடுமையான தண்டனை வழங்காவிட்டால் ஒட்டுமொத்த குடும்பமும் தற்கொலை செய்துகொள்வோம் என அவர்கள் எச்சரித்தனர்.
உத்தரபிரதேசத்தில் தாய்க்கும் மகளுக்கும் நிகழ்ந்த பாலியல் கொடுமைக்கு எதிராக கொந்தளிப்பு!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 02, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 02, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.