Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 1, 2016

தமிழ்நாடு இறகுப் பந்துக் கழகத் தலைவர் பொறுப்பிலிருந்து அன்புமணி ராமதாஸ் அதிரடி நீக்கம்


தமிழ்நாடு இறகுப்பந்துக் கழக தலைவர் பொறுப்பிலிருந்து அன்புமணி ராமதாஸ் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அச்சங்கத்தின் பொருளாளர் ராஜ்குமார் இதனைத் தெரிவித்துள்ளார். விதிமுறைகளுக்கு எதிராக செயல்பட்டதாலும், தன்னிச்சையாக அதிகாரத்தை பயன்படுத்தியதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும் அன்புமணியிடம் ஒப்படைக்கப்பட்ட லட்சக்கணக்கான மதிப்புள்ள பொருள்கள் எங்கே போனது எனத் தெரியவில்லை எனவும் குற்றம் சாட்டினார். இதனால் அவரை தலைவர் பொறுப்பிலிருந்து நீக்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக ராஜ்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.