Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 29, 2016

எதிர்பாராமல் கண்டுபிடிக்கப்பட்ட ‘அல்சைமர்’ மருந்து!


‘அல்சைமர்’ நோய் என்பது நினைவாற்றலில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் நோய் ஆகும். முதியவர்களை அதிகம் பாதிக்கும் இந்நோயைக் குணப்படுத்தும் மருந்தைக் கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.

இந்நிலையில், ஒரு வலி நிவாரணி மருந்து, அல்சைமர் நோயின் அறிகுறிகளை நீக்குவது எதிர்பாராமல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

‘மெபெனாமிக் அசிட்’ என்பது ஸ்டீராய்டுகள் அற்ற ஒரு மாத்திரையாகும். இது பலவித அழற்சிகளில் இருந்து விடுபட பயன்படுத்தப்படுகிறது.

பெண்களின் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலியைக் குணப்படுத்தவும் இந்த மாத்திரை பயன்படுத்தப்படுகின்றது.

இந்நிலையில், குறிப்பிட்ட மாத்திரையைப் பயன்படுத்தியே அல்சைமர் நோய் அறிகுறிகளை இல்லாமல் செய்ததாக மான்செஸ்டர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

இம்மருந்தை முதன்முதலாக எலிகளில் பயன்படுத்தியபோது, அவற்றின் நினைவாற்றல் தன்மையில் நல்ல முன்னேற்றம் தெரிந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

என்.எல்.ஆர்.பி. 3 என்ற வேதிப்பொருளானது மூளைச் செல்களைத் தாக்கி சேதத்தை ஏற்படுத்துவதால்தான் அல்சைமர் நோய் ஏற்படுகிறது.

இந்த வேதிப்பொருளுக்கு எதிராகச் செயல்படுவதன் மூலம், மேற்கண்ட நோய் நிவாரணியானது அல்சைமர் நோயைத் தடுக்கிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.