கோவையில் செல்பி எடுத்த போது 120 அடி ஆழ கிணற்றில் மூழ்கிய பள்ளி மாணவர் உடலை தேடும் பணி இரண்டாவது நாளாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடற்படை வீரர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.
கோவை தென்னம்பாளை யத்தை சேர்ந்த சிவக்குமார். கருமத்தம்பட்டி அருகே உள்ள அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் ஹரீஸ் (வயது 17) பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். சுதந்திர தின விடுமுறை நாளான நேற்று ஹரீஸ் தனது நண்பர்கள் 4 பேருடன் கோவை ஜி.வி.ரெசிடென்சி பகுதிக்கு சென்றார். அங்கு நண்பர்கள் அனைவரும் 120 அடி ஆழமுள்ள அபாய கிணற்றை எட்டிப் பார்த்து செல்போனில் ‘செல்பி’ எடுத்துள்ளனர்.
அப்போது ஹரீஷ் கிணற்றின் படிக்கட்டில் சில அடி தூரம் இறங்கி நின்று போட்டோ எடுக்க முயற்சி செய்த போது கால் தவறி கிணற்றில் விழுந்தார். உயிருக்கு போராடிய அவரை நண்பர்களால் காப்பாற்ற முடியாததால் ஹரீஷ் நீரில் மூழ்கினார்.
இதனைத் தொடர்ந்து நண்பர்கள் அழுததை பார்த்து கிராம மக்கள் கிணற்றுக்குள் குதித்து தேடும் பணியில் ஈடுபட்டனர். 120 அடி ஆளம் கொண்ட கிணற்றில் சுமார் 60 அடிக்கு தண்ணீர் இருக்கும் காரணத்தினால் சிரமம் ஏற்பட்டது. இதுகுறித்த தகவலின்பேரில் பீளமேடு தீயணைப்பு நிலைய அலுவலர் செந்தில் குமார் தலைமையில் வீரர்கள் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று மாணவர் ஹரீஷ் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். மதியம் 2.30 மணிக்கு தொடங்கிய பணி இரவிலும் நீடித்தது. அதிகாலை 3.30 மணி வரை தேடிப் பார்த்தும் ஹரீஷ் உடல் கிடைக்க வில்லை. இன்று 2-வது நாளாக மாணவர் உடலை தேடும் பணி நடந்து வருகிறது.
இதற்கிடையே ரெட்பீல்ட்சில் உள்ள கடற்படை வீரர்கள் அடங்கிய குழுவினர் அங்கு சென்றனர். அவர்கள் கிணற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இன்று கடற்படையில் உள்ள ‘டைவிங் சூட்’ எனப்படும் தண்ணீருக்குள் மூழ்கி தேடும் கருவிகள் மூலம் கடற்படை வீரர்கள் மாண வர் உடலை தேடும் பணியில் ஈடுபடுகின்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.