வார விடுமுறை நாட்கள் அல்லது விடுமுறை நாட்களில் குடும்பத்தினர் அல்லது நண்பர்களோடு சேர்ந்து திரைப்படங்களுக்கு சென்று மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பது நகர்ப்புற வழக்கங்களில் ஒன்று. இப்போதைய தொலைக்காட்சி பெட்டிகள் அகலமான திரை கொண்டதாகவும், அதிகமான எடை இல்லாமலும், வீடுகளில் சுலபமாக பொருத்திக்கொள்ளும் விதத்தில் இருப்பதால் ‘ஹோம் தியேட்டர்’ அமைப்புகள் பலரது வீடுகளில் இருக்கின்றன. வீடுகளில் ‘சரவுண்டு சிஸ்டம்’ முறைப்படி ‘ஹோம் தியேட்டர்’ அமைப்பது பற்றி உள்கட்டமைப்பு நிபுணர்கள் தரக்கூடிய முக்கிய குறிப்புகளை இங்கே
காணலாம்.
அறை தேர்வு
பூஜையறை அல்லது குழந்தைகள் படிக்கும் அறையை ஒட்டியவாறு ‘ஹோம் தியேட்டர்’ வருவது கூடாது. முக்கியமாக ஓரிரு ஜன்னல்கள் இருக்கும் அறையே பொருத்தமாக இருக்கும். அங்கே இருக்கும் ‘பர்னிச்சர் ஐட்டங்கள்’, தரை விரிப்புகள் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். ஜன்னல் திரைகள் மற்றும் கதவுகளுக்கான திரைகள் ஆகியவற்றின் தேர்வுகளை சரியாக அமைத்துக்கொள்வது முக்கியம். ஏனென்றால் மென்மையான திரைகள் மற்றும் ‘புளோர் மேட்’ ஆகியவை அறையின் ஒலி பிரதிபலிப்புகள் நமது காதுகளுக்கு சரியாக எட்ட உதவுகின்றன.
இருக்கை அமைப்பு
குடும்ப உறுப்பினர்கள் அமர்வதற்கு ஏற்ப இருக்கைகள் ‘தியேட்டர் எபெக்டில்’ இருந்தால் அது பார்க்க அழகாக இருக்கும். முன்புறம் இருப்பவர்கள் திரையை மறைக்காமல், பின்னால் இருப்பவர் பார்ப்பதற்கு வசதியாகவும் அது இருக்கும். பெரிய அளவிலான தொலைக்காட்சி திரை அல்லது ‘புரொஜெக்டர்’ கொண்டு இயக்கப்படும் திரையாக இருந்தாலும் சரியான தொலைவில் இருப்பது முக்கியம். அதாவது திரையின் குறுக்களவு எவ்வளவு உள்ளதோ அதற்கு 3 மடங்கு தூரத்தில் அமர்ந்து பார்ப்பதுதான் முறையாகும்.
அறையின் ‘லைட் செட்டிங்’
‘ஹோம் தியேட்டர்’ அறையானது கச்சிதமான ஒளியமைப்பு கொண்டதாக இருக்க வேண்டும். அதிக வெளிச்சம் அல்லது இருட்டு இல்லாமல் மத்திய அளவில் இருக்கவேண்டும். அறையின் ‘லைட் செட்டிங்’ திரையில் ஒளிப்பிரதிபலிப்பு ஏற்படுத்துவதுபோல இருக்கக்கூடாது.
‘ஸ்க்ரீன்’ வெளிச்சம்
தொலைக்காட்சி திரை அமைப்புகள் பெரும்பாலும் எல்.ஈ.டி வகையாக இருப்பதால் விளக்குகள் அணைக்கப்பட்ட பின்பு கண்களை கூசும்படியான வெளிச்சம் அதிலிருந்து வரக்கூடாது. அத்துடன் ‘சவுண்டு சிஸ்டம்’ அமைப்பும் சரியாக இருக்கும்படி கவனித்துக்கொள்ளவேண்டும்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.