Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 1, 2016

இன்று முதல் அமலுக்கு வருகிறது தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு பால் முகவர்கள் கண்டனம்


தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனர் மாநில தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

ஆந்திராவில் இருந்து வருகின்ற முன்னணி தனியார் பால் நிறுவனமான ‘‘ஹெரிடேஜ்’’ நிறுவனம் நாளை (இன்று) முதல் தங்களின் பாலுக்கான விற்பனை விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்துவதாக தெரிவித்துள்ளது. ஏற்கனவே பல்வேறு வகையில் தமிழக மக்களை அண்டை மாநிலங்கள் வஞ்சித்து வருகின்ற சூழ்நிலையில் தற்போது அண்டை மாநில பால் நிறுவனங்களின் இந்த செயல்பாடுகள் பால் முகவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் பால் உற்பத்தி அபரிமிதமாக இருக்கின்ற சூழ்நிலையில் பால் கொள்முதல் விலையிலும், வாகன எரிபொருள் விலையிலும் எந்த ஒரு மாற்றமும் ஏற்படவில்லை. இந்த சூழ்நிலையில் ‘‘ஹெரிடேஜ் நிறுவனம்’’ தங்களின் பாலுக்கான விற்பனை விலையை தன்னிச்சையாக உயர்த்துவதை ‘தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்’ சார்பில் வன்மையாக கண்டிப்பதோடு ஹெரிடேஜ் நிறுவனத்தின் தன்னிச்சையான பால் விலை உயர்வுக்கு தமிழக அரசு உடனடியாக தடை விதிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.