மும்பை,
பொதுத்துறை வங்கிகளில் உயர் பொறுப்புக்களில் இருப்பவர்களுக்கு குறைவான சம்பளமும், கீழ்மட்ட அளவிலான பணியாளர்களுக்கு அதிக சம்பளமும் வழங்கப்படுவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
மும்பையில் நடைபெற்ற வங்கிகளுக்கான கருத்தரங்கு ஒன்றில் அவர் பேசுகையில், 'பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்திலும் தற்போது இருக்கக்கூடிய பிரச்சனைகளில் ஒன்று கீழ் மட்ட அளவில் அதிக சம்பளமும், உயர்மட்ட அளவில் குறைவான சம்பளமும் வழங்கப்படுவது. எனக்கு கூட சம்பளம் குறைவாக வழங்கப்படுவதாகவே உணர்கிறேன். ரிசர்வ் வங்கியில் வழங்கப்படும் சம்பளத்தை பொறுத்தவரை கிளாஸ் 3 பிரிவில் உள்ள பணியாளர்களுக்கு கூட கவர்ச்சிகரமான சம்பளம் வழங்கப்படுகிறது. அதனால்தான், கிளாஸ் 3 பிரிவில் கூட நாம் பல இன்ஜினியர்களையும், எம்.பி.ஏ படித்தவர்களையும் காண்கிறோம்' என தெரிவித்தார்.
மேலும், பொதுத்துறை வங்கிகளின் மேலாண்மையில் மற்ற ஒழுங்குமுறை ஆணையங்களின் அதிக அளவிலான ஆதிக்கத்தை குறைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
ரிசர்வ் வங்கி அறிக்கையின்படி, ரகுராம் ராஜனின் கடந்த ஜூலை மாத சம்பளம் ரூ.1,98,700 என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.