தற்போது பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் ஒரு பேரலுக்கு 47 முதல் 49 டாலராக வர்த்தகமாகி வருகிறது. சென்ற ஆண்டு கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட கடும் சரிவு காரணமாக இந்திய பொருளாதாரத்திற்கு பெரிய ஆதாயம் கிடைத்தது.
இந்நிலையில், கச்சா எண்ணெய் விலை அதிகரித்தால் இந்திய பொருளாதாரம் பாதிக்கும் என பா.ஜ.க. தலைவர் சுப்ரமணியன் சுவாமி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது பதிவில் குறிப்பிட்டுள்ளவை பின்வருமாறு:-
இந்தியாவின் 80 சதவீத கச்சா எண்ணெய் தேவை இறக்குமதியை சார்ந்தே இருப்பதால் ஒவ்வொரு ஆண்டும் அதிக அளவில் செலவிட வேண்டியுள்ளது. குறிப்பாக, ஒரு பேரலுக்கு ஒரு டாலர் விலை அதிகரித்தால் ஒரு ஆண்டுக்கு ரூ.9,126 கோடியை நாம் அதிகமாக செலவிட வேண்டியிருக்கும். இதுமட்டுமல்ல, கச்சா எண்ணெய் விலை அதிகரித்தால் அது நாட்டின் பணவீக்கம் மற்றும் வளர்ச்சியையும் பாதிக்கும்.
எனது டுவிட்டர் கணக்கை பின்தொடர்பவர்களில் யாரேனும் எதிர்காலத்தில் கச்சா எண்ணெய் விலை எப்படி இருக்கும் என கணிக்க தெரிந்தவர்கள் இருந்தால் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் கச்சா எண்ணெய் விலை நிலவரம் எவ்வாறு இருக்கும் என எனக்கு தெரிவியுங்கள்.
இவ்வாறு சுப்ரமணியன் சுவாமி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக 2013-14-ல் 143 பில்லியன் டாலர்களை இந்தியா செலவிட்டிருந்தது. அப்போது ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 112.7 டாலராக இருந்தது. ஆனால், 2015-16-ல் ஒரு பேரலுக்கு 48 டாலராகவிலை சரிந்ததால் 63.96 பில்லியன் டாலர்கள் மட்டுமே செலவாகியுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.