Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 15, 2016

'எங்களுக்கு நீதி வேண்டும்...!'- ரத்தத்தில் முதல்வருக்கு கடிதம் எழுதி அனுப்பிய சிறுமி!


பலாந்தஷார்: தனது தாயாரை தீ வைத்து எரித்துக் கொலை செய்தவர்களை கைது செய்து,  கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனக் கோரி, 15 வயது சிறுமி உத்தரபிரதேச முதல்வருக்கு தன் ரத்தத்தால் கடிதம் எழுதி அனுப்பி உள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம்,  பலாந்தஷார் என்ற இடத்தில், அனு பன்சால் என்பவர் கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி,  தனது இரு பெண் குழந்தைகளின் கண் எதிரே சிலரால் தீ வைத்து எரித்துக் கொலை செய்யப்பட்டார்.

இந்நிலையில், தனது தாயை கொலை செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டுமென அனு பன்சாலின் மகள் லத்திகா, உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் அகிலேஷ் யாதவுக்கு,  தன் ரத்தத்தில் கடிதம் எழுதி அனுப்பி உள்ளார்.



அந்த கடிதத்தில், ''எனது பாட்டி, ஆண் குழந்தை பிறக்கவில்லை எனக் கூறி எனது அம்மாவைத் தொடர்ந்து துன்புறுத்தி வந்தார். என்னையும் எனது சகோதரியையும்கூட கொடுமைப்படுத்தினார். ஒரு கட்டத்தில் நாங்கள் வீட்டைவிட்டு வெளியே வந்து தனியாக வசிக்க ஆரம்பித்தோம். எங்கள் தந்தை அடிக்கடி எங்களை வந்து பார்த்துவிட்டுப் போவார். எனது அம்மா எரித்து கொல்லப்பட்ட தினத்தன்று, எனது பாட்டி மற்றும் சிலர் எங்கள் வீட்டிற்கு வந்து, 'ஆண் குழந்தை வேண்டுமென்பதால் உனது கணவருக்கு 2-வது திருமணம் செய்து வைக்கப் போகிறோம். நீ விலகிச் சென்று விடு' என்று எனது அம்மாவை மிரட்டினர். அதற்கு எனது அம்மா மறுக்கவே, அவர் மீது மண்ணெண்ணெயை ஊற்றி எரித்துக் கொன்று விட்டனர்.

எங்கள் கண் எதிரே இந்த சம்பவம் நடந்தது. நான் என்னுடைய மாமாவிற்கு போன் செய்து, அவரது உதவியுடன், என் அம்மாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். ஆனால், எனது அம்மாவை காப்பாற்ற முடியவில்லை. இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். இரண்டு மாத காலத்திற்கும்மேல் ஆகியும் இதுவரை போலீசார் இதில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், எனது அம்மா தற்கொலை செய்து கொண்டதாக எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர். அதனால், எனது அம்மாவை கொன்றவர்களுக்கு கடுமையானத் தண்டனை வழங்க வேண்டும். எங்களுக்கு நீதி வேண்டும்" என்று குறிப்பிட்டு உள்ளார்.

இந்த கடிதம் அகிலேஷ் யாதவை உலுக்கியதை அடுத்து, இதில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.