Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 17, 2016

91 அடி ஆழம் உள்ள கடலில் 38 மணி நேரம் நீந்தி உயிர் தப்பிய பெண்91 அடி ஆழம் உள்ள கடலில் 38 மணி நேரம் நீந்தி உயிர் தப்பிய பெண்


சீனாவை சேர்ந்த  பான் (32) என்ற பெண், ஜப்பானிலிருந்து ஷாங்காய் நகருக்கு சென்ற குரூஸ்  என்ற கப்பலில் கடந்த 10ம் தேதி பயணம் செய்துள்ளார். அவர் ஷாங்காய் பகுதி அருகே வந்த போது கப்பலில் இருந்து தவறி விழுந்துள்ளார்.

ஆனால் தன் மகள் வீடு திரும்பாததை அறிந்த அவரது தந்தை பான் சென்ற கப்பலுக்கு தொடர்புகொண்டு பேசியுள்ளார். ஆனால் அவர்களோ தாங்கள் பயணிகள் அனைவரையும் ஷாங்காய் நகரில் இறக்கிவிட்டதாக கூறினார்.

இந்நிலையில் கடந்த 11 ஆம் தேதி அப்பகுதி வழியே படகில் சென்ற ஒருவர் பான் கடலில் தத்தளித்துகொண்டிருப்பதை கண்டு அவரை உயிருடன் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

அவர் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த போது மீன்கள் சில கடித்திருப்பதாகவும், அதனால் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் 91 அடி ஆழம் உள்ள கடலில் ஒரு லைப் ஜாக்கெட் இல்லாமலும், உணவு எதுவுமில்லாமல் தொடர்ந்து 38 மணி நேரம் கடலில் பான் உயிருடன் மீட்கப்பட்டதை கண்டு அவரது தந்தையார் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

பான் ஒரு நல்ல நீச்சல் வீரர் என்பதால், அவர் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.