பீகாரில் நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வில் அரசியல் பாடப்பிரிவில் முதலிடம் பெற்ற மாணவியாக அறிவிக்கப்பட்ட ரூபி ராய் உள்ளிட்ட சிலர், அடிப்படை கேள்விகளுக்குக் கூட பதில் தெரியாதவர்கள் என்பது உள்ளூர் தொலைக்காட்சி ‘சேனல்’கள் மூலம் அம்பலமானது.
முதலிடம் பெற்ற 14 மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தி, அதில் தேர்ச்சி பெறாத ரூபி ராய் உள்ளிட்ட மாணவர்களின் பிளஸ் 2 தேர்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, இவ்வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுப் படையினர், ஜூன் மாதம் 25-ம் தேதி ரூபி ராயை கைது செய்து, பியோர் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன் அறிவியல் பிரிவில் முதலிடம் பிடித்த ராகுல் குமார் என்ற மாணவர் சிறப்பு புலனாய்வு போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், 5 லட்சம் ரூபாயை இரண்டு தவணைகளில் லஞ்சமாக கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.
லஞ்சம் அளித்த மாணவர்கள், தேர்வு நாளன்று தேர்வு அறைக்கு சென்று, விடைத்தாளில் தங்கள் பெயரை மட்டும் எழுதிக்கொடுத்துவிட்டு வந்துவிடாலம். பிறகு இரவில் மீண்டும் தேர்வு அறைக்கு சென்று, அங்கு தயாராக இருக்கும் விடைகளை பார்த்து கேள்விகளுக்கு விடை அளித்ததாக தெரிவித்துள்ளார்.
இவ்வழக்கில் பீகார் பள்ளித் தேர்வு வாரிய முன்னாள் தலைவர் லால்கேஷ்வர் பிரசாத் சிங், அவரின் மனைவி உஷா சின்ஹா, பிஷுன் ராய் கல்லூரி முதல்வர் பச்சா ராய் உட்பட 45-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.