Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 16, 2016

கழிவுநீர் கலந்த குடிநீரை அருந்திய 3 பேர் மரணமடைந்த சம்பவம்: ஆட்சியர் நடவடிக்கை



திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே கழிவுநீர் கலந்த குடிநீரை அருந்திய 3 பேர் உயிரிழந்தது தொடர்பாக இருவரைப் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி உத்தரவிட்டுள்ளார்.
திருத்தணியைடுத்த சொரக்காபேட்டையில் கழிவுநீர் கலந்துவந்த தண்ணீரை அருந்திய உண்ணாமலை என்ற மூதாட்டியும், கன்னியப்பன் என்பவரும் உயிரிழந்தனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் சாவித்திரி என்ற மூதாட்டி சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் உயிரிழந்துவிட்டதாக அவரது உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஊராட்சி மன்றச் செயலாளர் சந்துரு மற்றும் குடிநீர் விநியோகம் செய்யும் பம்ப் ஆப்பரேட்டர் செல்வம் ஆகியோரைத் பணியிடை நீக்கம் செய்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் ஊராட்சி மன்றத் தலைவரிடமும் அவர் விளக்கம் கேட்டுள்ளார்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.