Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 13, 2016

'என் மகளை ஏன் கொன்றாய்?' அடையாள அணிவகுப்பில் கதறிய சுவாதியின் தந்தை


இன்ஃபோசிஸ் ஊழியர் சுவாதி கொலை செய்யப்பட்ட வழக்கில் நேற்று நடந்த குற்றவாளி அடையாள அணிவகுப்பில் சுவாதியின் தந்தை 'என் மகளை ஏன் கொலை செய்தாய்' என ராம்குமாரிடம் கேட்டு கதறியதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

‘சுவாதி படுகொலை அன்றே, ராம்குமார் ஊருக்கு கிளம்பியது ஏன்?’ -

சுவாதி படுகொலை வழக்கின் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ராம்குமார் மட்டும்தான் குற்றவாளி என போலீஸார் அவசரம் அவசரமாக வழக்கை முடிக்க நினைக்கின்றனர். அவர்தான் குற்றவாளி என்றால், கடுமையான தண்டனையை நீதித்துறை வழங்கட்டும். அதற்குள்ளாகவே, போலீஸாருக்கு முதல்வர் பாராட்டுப் பத்திரம் வழங்க வேண்டிய அவசியம் என்ன?


இன்ஃபோசிஸ் ஊழியர் சுவாதி கொலை செய்யப்பட்ட வழக்கில்  குற்றவாளி அடையாள அணிவகுப்பு புழல் சிறையில் நேற்று நடந்தது. நீதிபதி ஆர். சங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த அடையாள அணி வகுப்பில்  சுவாதியின் தந்தை சந்தான கோபால கிருஷ்ணன், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடை வைத்திருக்கும் சிவகுமார் உள்ளிட்டோர் ராம்குமாரை அடையாளம் காணும் நபர்களாக பங்கேற்றனர்.

அணிவகுப்பில் அடையாளம் காட்ட வந்தவர்கள் முன்னிலையில் 10 பேர் நிறுத்தப்பட்டனர். ராம்குமாரை போலவே முகத்தோற்றம் கொண்ட 35 பேரில் இருந்து 10 பேரை நீதிபதி சங்கர் தேர்வு செய்து அடையாள அணிவகுப்பில் பங்கேற்க வைத்தார். ராம்குமாரை அவரது விருப்பம்போல 10 பேர் கொண்ட வரிசையில் எந்த இடத்தில் நிற்கவும் அனுமதி அளித்தார் நீதிபதி.  ராம்குமாரின் கழுத்தில் பிளேடால்  வெட்டப்பட்டு, தையல் போட்ட அடையாளம் இருப்பது அனைவருக்குமே தெரியுமென்பதால், அடையாள அணிவகுப்பில் பங்கேற்ற அனைவரின் கழுத்திலும் பிளாஸ்திரி போடப்பட்டு ஒரே மாதிரியாக காட்சியளிக்குமாறு செய்யப்பட்டது

ராம்குமாரை அடையாளம் காட்ட மொத்தம் 3 முறை அடையாள அணி வகுப்பு நடத்தப்பட்டது. முதல் ரவுண்டில்  சுவாதியின் தந்தை, ராம்குமாரை சரியாக அடையாளம் காட்ட முடியாமல் குழம்பியதாகத் தெரிகிறது. எனினும் மிகுந்த யோசனைக்குப்பின் இவர்தான் என்று அடையாளம் காட்டியதாக கூறப்படுகிறது. இரண்டாவது ரவுண்டில் அனைவருமே சிவப்பு சட்டை அணிந்திருந்தனர். இந்த ரவுண்டிலும் சுவாதியின் தந்தையும், சிவகுமாரும் ராம்குமாரை எளிதாக அடையாளம் காட்டியுள்ளனர்.

முதல் இரு ரவுண்டுகளிலும் ராம்குமாரை அடையாளம் காட்டினாலும் ராம்குமாரிடம் சுவாதியின் தந்தை எதையும் பேசவில்லை. ஆனால் மூன்றாவது ரவுண்டில் ராம்குமாரை பார்த்ததும் சுவாதியின் தந்தையால் தனது உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை. உணர்ச்சிவசப்பட்டவராய், '' என் மகளை ஏன் கொலை செய்தாய்' என திரும்ப திரும்பக் கேட்டு என்று கதறியுள்ளார். “உன்னால்தானே எனது மகள் கொல்லப்பட்டாள் இப்போது நானும் உன்னால்தான் சிறைக்குள்ளேயே வந்துள்ளேன் ''எனக் கூறி கண்ணீர் விட்டதாக சொல்லப்படுகிறது. அப்போது அருகிலிருந்தவர்கள் அவரைத் தேற்றி அழைத்துவந்தனர் என்கிறார்கள்.

இந்த 3 ரவுண்டு அடையாள அணிவகுப்பிலுமே, சிவகுமார்  எந்த சந்தேகமும் இல்லாமல் ராம்குமாரை சரியாக அடையாளம் காட்டியதாகக் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.