Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 11, 2016

இன்றைய குழந்தைகளுக்கு பிடிச்ச சாகச விளையாட்டுகள்


இன்றைய குழந்தைகளுக்கு பிடிச்ச சாகச விளையாட்டுகள்
தற்போதுள்ள குழந்தைகள் அனைத்திலுமே வித்தியாசமானவர்களாக இருக்கின்றனர். நமது பாரம்பரிய விளையாட்டான கால் பந்து, கூடைப் பந்து போன்ற விளையாட்டுகளில் ஆர்வமின்றி, வித்தியாசமான விளையாட்டுக்களை விரும்புகின்றனர்.

அவர்கள் உடல் மற்றும் மன வலிமையைக் காட்டும், விளையாட்டுகளான புதுப்புது சாகச விளையாட்டுக்களைத் தான் அதிகம் விரும்புகின்றனர். ஆகவே அத்தகைய விருப்பமான விளையாட்டுக்களில் அவர்களை ஈடுபடச் செய்து, அவர்களை மகிழ வையுங்கள். தற்போதுள்ள குழந்தைகளுக்குப் பிடிக்கும் சாகச விளையாட்டுக்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

பாறை ஏறுதல் விளையாட்டால், உடல் மற்றும் மனம் நன்கு ஆரோக்கியமடையும். எனினும் இது பெற்றோர்களை பொறுத்த வரை ஒரு ஆபத்தான விளையாட்டு என்று தான் சொல்வார்கள். ஆகவே இதில் உங்கள் குழந்தைகளுக்கு ஆர்வமிருந்தால், முறையான பயிற்சியாளரைக் கொண்டு, சொல்லிக் கொடுக்க வேண்டும். இதனால் அவர்கள் மிகவும் பாதுகாப்புடன் இருப்பார்கள். அதிலும் இதில் பெற்றோர்களுக்கு பயமாக இருந்தால், அதற்கு பதிலாக சுவற்றை ஏறச் சொல்லிக் கொடுக்கலாம்.

குழந்தைகளை எங்காவது ட்ரெக்கிங் எனப்படும் நீண்ட தூர பயணமாக ஏதாவது மலைக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு சற்று வித்தியாசமான அனுபவத்தை ஏற்படுத்தலாம். அதுவும் இந்த ட்ரெக்கிங்கை 4 வயதிற்கு மேல் தான் அழைத்துச் செல்ல வேண்டும். அதிலும் இரவு நேரத்தில் உறவினர்கள் அல்லது நண்பர்களுடன் அழைத்துச் சென்று, இரவில் ஒரு பார்ட்டி போன்று கொண்டாடி மகிழலாம்.

ஆற்றை கடப்பது என்பது குழந்தைகளுக்குப் பிடித்த ஒரு நல்ல செயல். அதற்கு ஆற்றின் இரு முனைகளிலும் கயிற்றை கட்டிவிட்டு, அதனைப் பிடித்து தொங்கிக் கொண்டு, கடக்கும் படியாக செய்யலாம். முக்கியமாக இதை செய்யும் முன், குழந்தைகளுக்கு அதை பிடித்து தொங்கும் அளவு சக்தி உள்ளதா என்பதை தெரிந்து கொள்ளவும். வேண்டுமென்றால் இதை வீட்டிலேயே கயிற்றைக் கட்டி செய்ய வைக்கலாம்.

கரடுமுரடாண சாலைகளில் சைக்கிள் ஓட்டி பழக இன்றைய குழந்தைகள் அதிகளவு விரும்புகிறார்கள். வார இறுதி நாட்களில் பெற்றோர் தங்கள் குழந்தைகளை அழைத்து செல்லலாம். அவர்களுக்கும் பாதுகாப்பாக இருக்கும்.

சில குழந்தைகள் அங்கும் இங்கும் தாவிக் கொண்டே இருப்பார்கள். அத்தகைய குழந்தைகளுக்கு இந்த ராப்பெல்லிங் எனப்படும் கயிற்றால் கீழே இறங்கும் விளையாட்டு பிடிக்கும். இதற்காகவே அட்வென்சர் கிளப் குழந்தைகளுக்காகவே, பாதுகாப்பான முறையில் இந்த விளையாட்டை அமைத்திருக்கிறது. உங்கள் குழந்தைகள் பாறை அல்லது சுவரில் ஏறுவதில் விருப்பமுள்ளவராக இருந்தால், இதில் சேர்த்துவிடுங்கள்.

பங்கீ ஜம்பிங் விளையாட்டை இன்றைய குழந்தைகள் மிகவும் விரும்புகிறார்கள். இந்த விளையாட்டில் காலில் கயிற்றைக் கட்டி மலையில் இருந்து குதிக்கிறாரோ, அதேப் போல் குழந்தைகளின் உடலில் கயிற்றைக் கட்டி, வீட்டிலேயே உயரத்தில் இருந்து, இதை செய்ய வைக்கலாம்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.