Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 19, 2016

இந்தியாவில் எதிர்ப்பு, மொரீசியஸில் வரவேற்பு: திருவள்ளுவர் சிலையைச் சுற்றிய அரசியல்!


திருவள்ளுவர் புகழ்பாடி வரும் பா.ஜ.க., எம்.பி. தருண் விஜய், தமிழகத்தில் தயாரான 12 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலையை, தமிழகத்தின் எல்லா ஊர்களுக்கும் ஊர்வலமாக கொண்டு சென்று, உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்துவாரில் கங்கைக்கரை ஓரம் நிறுவ முயன்றார். ஆனால் அங்குள்ள சில மதவாத அமைப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கவே,  இப்போது திருவள்ளுவர் சிலை ஹரித்துவாரின் பொதுப்பணித்துறை அலுவலகத்தில், பிளாஸ்டிக் துணியில் மூடப்பட்டு கேட்பாரற்று பரிதாபமாகக் கிடக்கிறது.

தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சிகளும், இதை திருவள்ளுவருக்கு நேர்ந்த அவமானமாக கருதி,  இந்த சம்பவத்தைக் கண்டித்து குரல் எழுப்பி வருகின்றன. இந்நிலையில் மொரீசியஸ் நாட்டில் நிறுவுவதற்காக,  தமிழகத்தில் இருந்து திருவள்ளுவர் சிலை சத்தம் இல்லாமல் பெரும் வரவேற்புடன் பல்வேறு ஊர்களின் வழியாக எடுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருக்கிறது.



தஞ்சாவூர் தமிழ்த்தாய் அறக்கட்டளை சார்பில் தயாரிக்கப்பட்ட, 2 ஆயிரம் கிலோ எடையும் 4 அடி உயரமும் கொண்ட இந்த திருவள்ளுவர் சிலை, மொரீசியஸ் நாட்டில் உள்ள மோக்கா நகரில்,  மகாத்மா காந்தி கல்வி நிறுவனத்தில் விரைவில் நிறுவப்படவுள்ளது. இந்த விழாவில்,  அந்த நாட்டின் துணை ஜனாதிபதி பாலன் உள்பட பலர் பங்கேற்கவுள்ளனர்.

கன்னியாகுமரியில் உள்ள நல்லதாணு சிற்பக்கூடத்தில்,  சிற்பிகள் பத்மநாபன், தியாகி முத்துக்கருப்பன், சிவம் ஆகியோர் மேற்பார்வையில் இந்த திருவள்ளுவர் சிலை உருவானது. கடந்த ஜூலை 15ம் தேதி,  கன்னியாகுமரியில் இருந்து லாரி மூலம் புறப்பட்ட சிலை, வரிசையாக திருநெல்வேலி, சங்கரன்கோவில், ஸ்ரீவில்லிப்புத்தூர், சிவகாசி வழியாக மதுரை சென்றது.

இதனைத் தொடர்ந்து திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், விருத்தாச்சலம், புதுச்சேரி, திண்டிவனம் மற்றும் செங்கல்பட்டு வழியாக ஜூலை 25 ம் தேதி சென்னை வந்தடைகிறது. 26 ம் தேதி சென்னையில் திருவள்ளுவர் சிலை  ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, மறுநாள்  27 ம் தேதி கப்பல் மூலம்  மொரீசியஸ் நாட்டுக்கு செல்கிறது. அங்கு குறிப்பிட்ட நாளில் சிலை நிறுவப்படவுள்ளது.

திருவள்ளுவர் சிலை வலம்வரும் ஒவ்வொரு ஊரிலும் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பெரும் வரவேற்பும், வழியனுப்பு நிகழ்ச்சிகளும் நடந்து வருகின்றன.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.