2016-ஆம் ஆண்டில் உலகின் அதிகம் சம்பாதிக்கும் 100 பிரபலங்களின் பட்டியலை அமெரிக்காவின் பிரபல ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் பிரபல பத்திரிகை, ஃபோர்ப்ஸ் இதழ். இது ஆண்டுதோறும் உலக பிரபலங்களின் பல்வேறுவிதமான தரவரிசை பட்டியல்களை வெளியிட்டுவருகிறது. இது தற்போது 2016-ஆம் ஆண்டின் உலக அளவில் அதிகம் சம்பாதிக்கும் 100 பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
கடந்த ஜூன் முதல் இந்த ஜூன் வரை எடுக்கப்பட்ட இந்த கணக்கெடுப்பில் இந்திய பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மற்றும் அக்ஷய் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆண்டிற்கு ரூ.221 கோடி வருமானம் ஈட்டி ஷாருக்கான் 86-வது இடத்தையும், ரூ.211 கோடி வருமானத்துடன் அக்ஷய் குமார் 94-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
அமெரிக்க பாடகர் டெய்லர் ஸ்விஃப்ட், கடந்த வருடத்தில் ரூ.1141 கோடி வருமானம் ஈட்டி முதல் இடம் பெற்றுள்ளார். நடிகர் ஜாக்கிசான் ரூ.409 கோடி வருமானம் ஈட்டி 21-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
பிரபலங்களின் பெயர் பட்டியலில் பிரபல விளையாட்டு வீரர் லியோனல் மெஸ்ஸி 8 வது இடத்தையும், பிரபல பாப் இசைப்பாடகி மடோனா 12 வது இடத்தையும், உலகின் பிரபல ஸ்டண்ட் நடிகர் ஜாக்கி சான் 23 வது இடத்தையும் பெற்றிருக்கின்றனர். ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் 37 வது இடம்பெற்றுள்ளார். நடிகர் ஜானி டெப் 46 வது இடமும் ஹாலிவுட் பாடகி ஜெனிபர் லோபஸ் 68 வது இடமும் பெற்றுள்ளனர்.
பிரபல ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட் 91 வது இடத்தையும், பிரபல பாடகி பிரட்னி ஸ்பியர்ஸ் 99 வது இடத்தையும் பெற்றுள்ளனர்.
ஃபோர்ப்ஸ் வெளியிட்ட இந்தப் பட்டியலில் இசைக்கலைஞர்களே பெரிதும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.