ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்த, 4 வயது பெண் குழந்தை, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது; அந்த குழந்தை கீழே விழுந்தது, அவளுடைய பெற்றோருக்கு கூட தெரியவில்லை. கேரளாவின் பப்பனம்கோடே பகுதியைச் சேர்ந்தவர் அனில்குமார். இவர், தன் மனைவி அம்பிலி மற்றும், 6 வயது மகன், மகள் அஞ்சனா, 4, ஆகியோருடன், கொல்லத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு ரயிலில் பயணம் செய்தார். அனில்குமார், மகளுடன் தனிப்பெட்டியிலும், அவருடைய மனைவி மற்றும் மகன் மற்றொரு பெட்டியிலும் பயணம் செய்தனர். மகள் அஞ்சனாவை தாயிடம் செல்லும்படி கூறிவிட்டு, கழிப்பறை சென்ற அனில்குமார், பின், ரயிலின் கதவோரம் நின்றபடி பயணித்தார். குழந்தை, தாயிடம் இருப்பதாக அனில்குமாரும், தந்தையிடம் இருப்பதாக அம்பிலியும் நினைத்துள்ளனர். சிறிது நேரத்துக்கு பின், இறங்க வேண்டிய இடம் வந்த போது தான், குழந்தை காணவில்லை என தெரிந்தது. பதற்றமடைந்த அவர்கள், ரயிலில் தேட துவங்கினர்; போலீசிலும் புகார் கொடுத்தனர். இந்நிலையில், ரயிலில் இருந்து கீழே விழுந்த குழந்தையை, ரயில்வே ஊழியர்கள் மீட்டு, போலீஸ் உதவியுடன் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தகவல் கிடைத்ததும், பதறி அடித்து, மருத்துவமனைக்கு சென்றார் அனில்குமார். 'ரயிலில் இருந்து கீழே விழுந்த குழந்தை அஞ்சனாவுக்கு, தலையில் வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளது. இதற்காக, அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது. இருப்பினும் ஆபத்து ஏதுமில்லை' என, டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.