Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 24, 2016

தன் உயிரை பணயம் வைத்து கொடூரர்களிடம் இருந்து இளம்பெண்ணை காப்பாற்றிய ரஜினி ரசிகர் !!!


சென்னையைச் சேர்ந்த மாடல் மற்றும் புகைப்பட கலைஞரான வசந்த் பால். இவர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் ஆவார் அதிகாலை கபாலி படத்தை முதல் காட்சியை பார்த்துவிட்டு தனது வீட்டுக்கு திரும்பினார்.

விமான நிலைய பாதையில் போக்குவரத்து இடையூறு அதிகமானதால், அவர் மாற்று பாதை வழியாக சென்றுள்ளார்.

சிறிது தூரம் சென்றதும் ஒரு பெண்ணின் அழுகுரல் கேட்டு வண்டியை நிறுத்தியுள்ளார். பின்னர் வண்டியிலிருந்து இறங்கி பார்த்தபோது திறந்தவெளியில் காப்பாற்றுங்கள் என கதறியதை கேட்டு அவ்வழியே சென்றவர்கள் உதவியுடன் அங்கு சென்றுள்ளார்.

அங்கு ஒரு பெண்ணை 3 நபர்கள் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளது தெரியவந்தது.

உடனே ஓடிச் சென்று அவர்களை வசந்த் தடுத்தபோது, 3 பேரும் தாக்கியுள்ளனர். இதைப்பார்த்த ரிக்ஷா டிரைவர் ஒருவர் ஓடிவந்து அவர்களை உதைத்துள்ளார். இதையடுத்து அந்த நபர்கள் தப்பியோடிவிட்டனர்.

அந்தப் பெண், போலீசில் புகாரளிக்க வேண்டாம் என்று கேட்டதால் வசந்த் புகாரளிக்கவில்லை என்று அவரது முகநூல் பதிவில் பதிவிட்டுள்ளார்.
58-24
இவரது துணிச்லை பாராட்டி பலரும் இவரது புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். தனிமையில் இருக்கிறோம் என்பதனால் நாம் பயப்பட தேவையில்லை எதையும் துணிந்து செய்தால் நம்மால் எதுவும் முடியும் என்றும் வசந்த் அவரது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.