Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 10, 2016

'தல' க்கு இந்த சாதனையில் இருந்து மட்டும் தலை தப்பட்டும்!


கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி இந்திய அணிக்காக முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கிய தோனி, 'கோல்டன் டக் 'ஆனார். பின்னாளில் இந்தியாவின் மிகவும் சக்ஸஸ்புல் கேப்டன் என்ற பெருமையை பெறுவார் என அப்போது யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். அண்மையில் 35வது பிறந்த தினத்தை கொண்டாடி  கிட்டத்தட்ட ஓய்வை நெருங்கிக் கொண்டிருக்கிறார். குறுகியக் காலக்கட்டத்தில் அவர் 7 சாதனைகள் படைப்பார் என எதிர்பார்க்கலாம்.

இந்திய அணிக்காக தோனி, மொத்தம் 324 சர்வதேச போட்டிகளில் கேப்டனாக பணியாற்றியுள்ளார். இதில் 60 ஒருநாள் சர்வதேச பேட்டிகள், 194 ஒருநாள் போட்டிகள், 70 டி20 போட்டிகள் அடங்கும்.  ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கும் இதே போல் 324 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். பாண்டிங் ஓய்வு பெற்று விட்டதால், இன்னும் ஒரு சர்வதேச போட்டியில்  தோனி களமிறங்கினால் கூட புதிய சாதனை படைத்து விடுவார்.

இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன் இதுவரை 119 போட்டிகளில் நாட் அவுட் ஆகி சாதனை படைத்துள்ளார். கடைசி விக்கெட்டாக களமிறங்கும் முத்தையா இந்த சாதனைக்கு சொந்தக்காரராக இருப்பது பெரிய விஷயம் அல்ல.  தோனியும் 439 இன்னிங்ஸ்களில் விளையாடி 115 போட்டிகளில் அவுட்டாகாமல் களத்தில் இருந்துள்ளார்.  தற்போது  முரளீதரனின் சாதனையை முறியடிக்க தோனிக்கு இன்னும் 5 ஆட்டங்களில் ' நாட் அவுட்' வேண்டும்.

ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக 194 போட்டிகளில் விளையாடி 121 சிக்சர்களை தோனி விளாசியுள்ளார். ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ரிக்கி பாண்டிங் 230 போட்டிகளில் விளையாடி 123 சிக்சர்களை அடித்துள்ளார். இன்னும் 3 சிக்சர்கள் அடித்தால், ஒருநாள் போட்டியில் அதிக சிக்சர்  அடித்த கேப்டன் என்ற பெருமையை தோனி பெறுவார்.



இந்திய அணிக்கு கேப்டனாக 194 ஒருநாள் போட்டிகளில் தோனி பணியாற்றியுள்ளார். அதில்,  107 போட்டிகளில் வெற்றி தேடிக் கொடுத்துள்ளார். ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆலன் பார்டரும் இதேபோல் 107 போட்டிகளில் அணிக்கு வெற்றி தேடி தந்துள்ளார். இன்னும் ஒரு போட்டியில் தோனி வெற்றி பெற்றால் கூட ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில், அதிக வெற்றிகள் பெற்ற 2வது கேப்டன் என்ற பெருமை தோனிக்குக் கிடைக்கும். இந்த பட்டியலில் ரிக்கி பாண்டிங், 165 வெற்றிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார்.


இந்திய அணிக்காக 194 ஒருநாள் போட்டிகளில் விளையாடிள்ள தோனி இதுவரை 45 அரை சதங்களை அடித்துள்ளார். அதேபோல், ரிக்கி பாண்டிங்  கணக்கில் 51 அரை சதங்கள் உள்ளன .  இன்னும் 6 அரைசதம் அடித்தால் ஒருநாள் போட்டியில் அதிச அரைசதங்கள் அடித்த கேப்டன் என்ற சாதனையை படைப்பார் தோனி.

ஒரு விக்கெட் கீப்பராக அதிக போட்டிகளில் விளையாடியவர் என்ற பெருமையும்  தோனிக்கு கிடைக்கவிருக்கிறது. இதுவரை 447 இன்னிங்ஸ்களில் அவர் விக்கெட் கீப்பராக விளையாடியிருக்கிறார். அதேபோல் தென்ஆப்ரிக்க வீரர் மார்க் பவுச்சரும் 447 இன்னிங்ஸ்களில் களமிறங்கியிருக்கிறார் . இன்னும் ஒரு ஆட்டத்தில் களமிறங்கினால் இந்த பட்டியலில் தோனி 2வது இடம் பிடிப்பார். இலங்கை முன்னாள் வீரர் சங்கக்காரா 474 சர்வதேச போட்டிகளில் விக்கெட் கீப்பராக ஆடியிருக்கிறார். இவருக்குதான் பட்டியலில் முதலிடம்.

தோனி படைக்கப் போகும் சாதனைகளில் இது ஒரு 'நெகடிவ் ' சாதனை. இதுவரை ஒதுருநாள் போட்டிகளில்  தோனி 11 முறை டக் அவுட் ஆகியிருக்கிறார். இந்த விஷயத்தில் 'தாதா' கங்குலிக்கு முதலிடம். அவர் 13 முறை டக் அவுட்டாகியிருக்கிறார். கங்குலியை மிஞ்ச தோனிக்கு இன்னும் 3 டக் அவுட்டுகள் தேவை.

'தல' இந்த சாதனையில் இருந்து மட்டும்  தப்பட்டும்!

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.