ராமநாதபுரத்தில் விசாரணைக்கு அழைத்து சென்ற வாலிபரை போலீஸ்காரர் கடித்தார்.ராமநாதபுரம் மாவட்டம், பி.கொடிக்குளத்தை சேர்ந்தவர் கார்த்திக்,23. தனியார் பள்ளி வேன் டிரைவர். சமீபத்தில் ஊரில் நடந்த கபடி போட்டியில் ஏற்பட்ட தகராறில் இவர் மீது திருப்பாலைக்குடி போலீசில் வழக்கு உள்ளது.
இதில், நிபந்தனை ஜாமினில் வந்தவர் ராமநாதபுரம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் கையெழுத்திட்டு வருகிறார். நேற்று காலை 11 மணிக்கு கோர்ட்டிற்கு வந்தவர் அங்குள்ள கேன்டீனில் டீ சாப்பிட்டார். அப்போது, ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸ் ஏட்டு சுரேஷ் அங்கு வந்தார். அவர் கார்த்திக்கிடம் பாஸ்கர் என்பவர் குறித்து கேட்டார். தனக்கு அப்படி யாரையும் தெரியாது, என்று கார்த்திக் கூறினார். ஆனால், கேணிக்கரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து கார்த்திக் கூறியதாவது: எனக்கு எதுவும் தெரியாது என்று கூறியும் அடித்து உதைத்தனர். ஏட்டு சுரேஷ் எனது இரண்டு கை விரல்களில் கடித்து துன்புறுத்தினார். மாலை 3 மணிக்கு என்னை விடுவித்தார். அப்போது, தனியார் மருத்துவமனைக்குதான் செல்ல வேண்டும், என மிரட்டி அனுப்பினார்.
நான் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகள் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். என்னை கடித்து துன்புறுத்திய ஏட்டு சுரேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.ஏட்டு சுரேஷ் இரண்டு ஆண்டுகளுக்கு முன் கள்ளத்துப்பாக்கி வைத்திருந்த வழக்கில் சப் இன்ஸ்பெக்டருடன் சேர்ந்து கைதானார். இதில் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர் மீண்டும் பணியில் சேர்ந்தார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.