மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வருகிறவர்கள், தவறவிடக் கூடாத ஓர் இடம், கிழக்குக் கோபுரத்துக்கு எதிரே இருக்கும் புது மண்டபம். நமது கலாசார பொருட்கள் சங்கமிக்கும் ஷாப்பிங் மால்.
மீனாட்சி அம்மன் கோயிலைக் கட்டி முடித்த பிறகு, கோயிலைத் திறக்கும்போது யாகம் நடத்த மண்டபம் தேவைப்பட்டது. அப்போது கட்டப்பட்டு, இப்போதும் புது மண்டபம் என்றே அழைக்கப்படுகிறது.
தமிழ்நாட்டுக்கே தேவைப்படும் சாமி அலங்காரத் துணிகள், சாமி முகக் கவசங்கள், திருவிழாக்களுக்கான அலங்காரப் பொருட்கள், ஜரிகைத் துணிகள் என எல்லாமே கிடைக்கும். இதை, தமிழ்நாட்டின் முதல் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் எனச் சொல்லலாம்.

“முன்பெல்லாம் இந்த மண்டபத்தில் ஆடித் திருவிழா, வைகாசித் திருவிழா, எண்ணெய்க் காப்புத் திருவிழா எனப் பல திருவிழாக்கள் நடைபெற்றன. 1920-ம் ஆண்டுக்குப் பிறகுதான் ஒவ்வொரு கடையாக வந்தன. இப்போது, சுமார் 250 கடைகள் இங்கே இருக்கின்றன” என்றார் ஒரு தாத்தா. இவர், புது மண்டபத்தில் 60 வருடங்களாக துணி தைக்கிறாராம்.
இன்னொரு கடையில் டர்பன், ஜரிகைத் துண்டுகள், மரப்பாச்சி பொம்மைகள், செம்மர சாமி பொம்மைகள் எல்லாம் இருந்தன. டர்பன்கள், திருமணம் மற்றும் கோயில் திருவிழாக்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.

‘‘செம்மர சாமி பொம்மைகள் ஒரு காலத்தில் செம்மரத்தில் செய்யப்பட்டன. குழந்தைகளுக்கு உடம்பு சரியில்லைனா, இந்தப் பொம்மையைப் பால்விட்டு உரசி, தலையில் தேய்ப்பாங்க. உடம்பு சரியாயிரும். இப்போ, செம்மரங்களை வெட்டக் கூடாதுனு சட்டம் வந்துட்டதால, சாதாரண மரத்துல செய்யுறாங்க’’ என்றார் அந்தக் கடைக்காரர்.
இன்னொரு கடையில் சாமி ஆட்டத்தின்போது அணியும் ஆடைகள், விசிறிகள், கதாயுதம், தலையில் கட்டும் துணி, முகமூடிகள் இருந்தன.
‘‘சாமி வேடத்தின் முகமூடியில் இருக்கும் தாடி, கற்றாழையின் நாரால் செய்யப்படுகிறது. முகமூடியின் பற்கள், பாசிகளால் செய்யப்படுகிறது. கறுப்பு நிற ஆடை கருப்பசாமிக்கும், சிவப்பு நிற ஆடை சோனைச்சாமி மற்றும் ஆண்டிசாமிக்கும் போடுவார்கள். இங்கே சாதி, மத பேதம் கிடையாது. பாரம்பரியமாக எங்கள் குடும்பம் இந்தக் கடையை நடத்துகிறது’’ என்றார், அந்தக் கடையின் உரிமையாளரான அமீர் ஜான்.

அருகிலேயே குங்குமம் விற்கும் பாட்டி, ‘‘மதுரையிலும் அதைச் சுற்றி உள்ள ஊர்களிலும் வருஷம் முழுவதும் ஏதாவது ஒரு திருவிழா நடந்துட்டே இருக்கும். அதனால், மங்களப் பொருட்களுக்கு எப்பவுமே வியாபாரம் இருக்கும். மீனாட்சி திருக்கல்யாணத்தின் போது வியாபாரம் சூடு பிடிக்கும்’’ என்றார்.

எல்லா கடைகளையும் சுற்றிப் பார்த்துவிட்டு, புதுமண்டபம் அருகே கம்பீரமாக நின்றிருக்கும் ஒரு நந்தி சிலைக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு கிளம்பினோம்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.