நீண்ட நாட்களுக்குப் பிறகு மே.இ.தீவுகளுக்கு எதிராக டெஸ்ட் போட்டியை எதிர்நோக்கும் வேகப்பந்து வீச்சாளர் மொகமது ஷமி மேற்கிந்திய தீவுகளில் இந்தியா போன்ற தட்பவெப்பம், ஆடுகள சூழல்களே இருக்கும் என்று எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ளார்.
பிசிசிஐ.டிவி இணையதளத்துக்கு அவர் சமீபத்தில் அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:
பிங்க் பந்தில் பந்து வீசி பயிற்சி செய்தேன், போட்டியிலும் பங்கேற்றேன். தற்போது என்னால் இயல்பாக வீச முடிகிறது, மீண்டும அணியுடன் சர்வதேச போட்டியில் இணைவது மகிழ்ச்சியளிக்கிறது.
சாதாரண ரெட் பந்துக்கும் பிங்க் பந்துக்கும் உள்ள வேறுபாடு என்னவெனில், சிகப்புப் பந்து ஒரு கட்டத்துக்குப் பிறகு ஸ்விங் ஆகாது, ஆனால் பிங்க் பந்து எப்போதும் ஸ்விங் ஆகிறது. 90-95 ஒவர்களில் கூட பிங்க் பந்தில் ஸ்விங் செய்ய முடிகிறது.
நான் மே.இ.தீவுகளில் ஆடியிருக்கிறேன், அங்கு இந்தியாவை விட வித்தியாசமான சூழ்நிலை இல்லை. இந்தியா போன்றுதான் உள்ளது. முன்பு விக்கெட்டுகள் அங்கே பவுன்ஸ் அதிகம் இருக்கும் என்று கூறப்படுவதுண்டு, தற்போது ஆசியப் பிட்ச்கள் போல்தான் அங்கும் உள்ளது. எனவே வேகப்பந்து வீச்சாளராக மே.இ.தீவுகள் பயணம் என்றவுடன் பவுன்ஸ் இருக்கும் வேகம் இருக்கும் என்ற உற்சாகத்துக்கு இடமில்லை, நல்ல அளவு மற்றும் திசையில் வீசுவது முக்கியம்.
அங்கும் ரிவர்ஸ் ஸ்விங் ஒரு ஆயுதமாக செயல்பட வாய்ப்புள்ளது, பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆகும் போது பந்து வீசிக் கொண்டேயிருக்க வேண்டும் போல் தோன்றும். பந்தை ரிவர்ஸ் ஸ்விங் ஆகுமாறு முன்னதாக பயன்படுத்த வேண்டும். ரிவர்ஸ் ஆனாலும் பந்து வீசப்படும் அளவு மற்றும் திசை என்பதே முக்கியம், அதைத்தான் நான் பயிற்சி செய்து வருகிறேன்.
மே.இ.தீவுகள் அணி அவர்கள் தினமாக அமைந்தால் அன்று அது ஒரு அபாயகரமான அணியாகவே திகழும். என்னைப்பொறுத்தவரை அவர்களுக்கு சிக்கனமாக வீசி கொஞ்சம் சுதந்திரமாக ரன்கள் எடுப்பதை தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும்.
இவ்வாறு கூறினார் மொகமது ஷமி.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.