தமிழக சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. போட்டியிட்ட 104 தொகுதியிலும் படுதோல்வி அடைந்தது. தேர்தலில் அக்கட்சியின் வாக்கு வங்கியும் சரிந்தது. இதையடுத்து கட்சி நிர்வாகிகளுடன் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், ஆலோசனை நடத்தியுள்ளார்.
அந்த ஆலோசனைக் கூட்டத்தில் விஜயகாந்திடம் நிர்வாகிகள் சரமாரியாக குற்றச்சாட்டுகளை கூறினர். பிரேமலதாவின் கூட்டணி முடிவுதான் தேர்தல் தோல்விக்கு காரணமாக அமைந்து விட்டது எனக் கூறிய அவர்கள், கட்சியில் எந்த முடிவு எடுத்தாலும் நீங்களே (விஜயகாந்த்) எடுக்க வேண்டும். உங்கள் மனைவி, மைத்துனர் தலையீடு இருக்க கூடாது என ஆவேசமாக பேசியுள்ளனர்.
இதையடுத்து பேசிய விஜயகாந்த், உங்களுக்காக நான் இருக்கிறேன். கட்சியில் இருப்பவர்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. யாரும் வெளியேறி செல்ல வேண்டாம். உள்ளாட்சி தேர்தலில் அனைவரும் பாடுபட வேண்டும் என்று நிர்வாகிகள் மத்தியில் பேசியுள்ளார்.
இந்நிலையில், தே.மு.தி.க. சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பிரேமலதா பங்கேற்கவில்லை. விஜயகாந்த் மட்டுமே கலந்து கொண்டார். கட்சி நிகழ்ச்சிகளில், நடவடிக்கைகளில் இனி விலகி இருப்பது என அவர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.