Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 11, 2016

அமெரிக்காவை பழிவாங்கியே தீருவேன்: பின்லேடன் மகன் சபதம்


அல் கொய்தா தீவிரவாதத்தின் தலவரான ஒசாமா பின்லேடனை அமெரிக்கா சுட்டுக் கொன்றதற்காக, அமெரிக்காவை பழிவாங்கியே தீருவேன் என்று, அவரது மகன் சபதம் ஏற்றுள்ள வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவனான ஒசாமா பின்லேடன் 2011-ம் ஆண்டு மே மாதம் பாகிஸ்தானில் உள்ள அபோடாபாத் என்ற நகரில் அமெரிக்காவின் ரகசிய தாக்குதலால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்நிலையில், ஒசாமா பின்லேடனின் மகன். தனது தந்தையை கொன்றதற்காக அமெரிக்காவையும் அமெரிக்கர்களையும் பழிக்குப்பழி வாங்குவேன் என ஹம்ஸா பின்லேடன் எச்சரித்துள்ள வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

மேலும் அந்த வீடியோ காட்சியில் முஸ்லீம் மதம் சார்பாகவும், முஸ்லீம் மதத்தை பின்பற்றும் நாடு மீது அடக்குமுறையை ஏர்படுத்தும் அமெரிக்கா மீது கடும் தாக்குதல் நடத்தப்படும் என்றும், தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.