Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 24, 2016

ரியோ ஒலிம்பிக்கில் தாயும் மகனும்!...சுவராஸ்யத்தைக் காண காத்திருக்கும் ரசிகர்கள்


ரியோ ஒலிம்பிக் போட்டியில் தாயும் மகனும் ஒன்றாக பங்கேற்கும் நிகழ்வு அரங்கேற இருப்பது,  பார்வையாளர்களை சுவராஸ்யத்திற்குள்ளாக்கியுள்ளது. ஜார்ஜியா வீராங்கனை நினோ, தனது மகனுடன் பங்கேற்கிறார்.

வரும் ஆகஸ்ட் 5ம் தேதி ரியோடி ஜெனிரோ நகரில் ஒலிம்பிக் போட்டித் தொடங்குகிறது.  இந்த போட்டியில் துப்பாக்கி சுடுதல் பந்தயத்தில் ஜார்ஜியா வீராங்கனை 47 வயதான நினோ சலுக்வாட்சே பங்கேற்கிறார். கடந்த 1988–ம் ஆண்டு இவர் சியோலில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் சோவியத் யூனியன் சார்பில் பங்கேற்று பெண்களுக்கான 25 மீட்டர் ஸ்போட்டிங் துப்பாக்கி சுடுதலில் தங்கப்பதக்கமும், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் வெள்ளிப்பதக்கமும் வென்று சாதனை படைத்தவர். அப்போது நினோவின் வயது 19.

தற்போது சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த ஜார்ஜியா சார்பில் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். கடந்த 2008ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக்கில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளார். இந்த நிலையில் ரியோ ஓலிம்பிக்கில் 8வது முறையாக நினோ பங்கேற்கிறார். இதில் இன்னொரு அரிய நிகழ்வாக அவரது மகன் 18 வயது டிசாட்னேவும் தாயுடன் சேர்ந்து 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் பங்கேற்கவுள்ளார்.

இது ஒரு ஆச்சர்யமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. நினோ இது குறித்து கூறுகையில், ''ஒரே ஒலிம்பிக்கில் நானும் எனது மகனும் பங்கேற்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. எங்களால் முடிந்தளவு திறமையை வெளிப்படுத்துவோம். எனது மகனின் ரசிகன் நான்'' என்றார். டிசாட்னே கூறுகையில், ''எனது முதலாவது ஒலிம்பிக் போட்டி இது. அதுவும் எனது  தாயுடன் இணைந்து போட்டியில் பங்கேற்பது இரட்டிப்பு மகிழ்ச்சி'' என்கிறார்.  

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.