பிரதமர் நரேந்திர மோடி ஆப்ரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். மொசாம்பிக்கில் இருந்து நேற்று தென்ஆப்ரிக்கா வந்த அவருக்கு டர்பனில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.இதுதான் மோடியின் தென் ஆப்ரிக்க முதல் பயணம். அங்கு, மகாத்மா சிலைக்கு பிரதமர் மோடி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதேபோல் தென் ஆப்ரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டோலாவின் சிலைக்கும் மரியாதை செலுத்தினார். இரு தலைவர்களைப் பற்றிய கண்காட்சியையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார். பின்னர் இரு தலைவர்களும் அடைத்து வைக்கப்பட்டிருந்த கன்ஸ்டிடியூசன் மலை பகுதியில் இருந்த சிறைச்சாலையையும் பிரதமர் மோடி சுற்றி பார்த்தார்.
தொடர்ந்து பிரதமர் மோடி, தென் ஆப்ரிக்காவில் கடந்த 1893ம் ஆண்டு, காந்தியடிகள் வெள்ளையர்களால் அவமதிக்கப்பட்டு ரயிலில் இருந்து இறக்கிவிடப்பட்ட பீட்டர்மாரிட்ஸ்பர்க் நகருக்கு அதே போன்ற ரயிலில் பயணம் மேற்கொண்டார். அவருடன் தென்ஆப்ரிக்க அரசின் உயர் அதிகாரிகளும் பயணித்தனர்.
அப்போது, ''காந்தியை மகாத்மா காந்தியாக மாற்றிய பெருமை இந்த மண்ணுக்கு உண்டு, அவரை மனித குலத்தின் உன்னத மனிதராக மாற்றியதும் இந்தப் பயணம்தான்'' என்று பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
இன்று மாலை தான்சேனியா புறப்படும் பிரதமர் மோடி, இறுதியாக கென்யா பயணத்துக்கு பிறகு தாயகம் திரும்புவார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.