Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 16, 2016

82 ஆண்டுகளுக்கு பிறகு கிரிக்கெட்டில் 42 வயது மிஷ்பா படைத்த சாதனை


கிரிக்கெட்டில் அதிக வயதில் சதமடித்த கேப்டன் என்ற பெருமையை பாகிஸ்தான் அணியின் 42 வயது கேப்டன் மிஷ்பா உல் ஹக் பெற்றுள்ளார்.

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில்,  இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் விளையாடி வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான், பேட்டிங்கை தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணி 77 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவித்த நிலையில், ஜோடி சேர்ந்த மிஷ்பா உல் ஹக்கும் ஆஷாத் சபீக்கும் நிதானமாக விளையாடி, ரன்களை உயர்த்தினர். இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு 148 ரன்களை சேர்த்தது.

மிஷ்பா உல் ஹக் 110 ரன்களை அடித்தார். 154 பந்துகளை எதிர்கொண்ட அவர், 17 பவுண்டரிகளையும் விளாசினார். இதன் மூலம் கிரிக்கெட் வரலாற்றில் அதிக வயதில் சதம் அடித்த கேப்டன் என்ற வரலாற்று சாதனையையும் மிஷ்பா படைத்தார்.

இதற்கு முன், கடந்த 1934 ம் ஆண்டு இங்கிலாந்து வீரர் பெஸ்டி ஹென்ட்ரன் தனது 45 வது வயதில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக  சதமடித்திருந்தார். அதற்கு பிறகு தற்போது மிஷ்பா உல் ஹக்,  42 வயதில் இந்த சாதனையை ஏற்படுத்தியுள்ளார். மிஷ்பா சதமடித்த பின்னர்,  தனது பாணியில் மைதானத்தில் விழுந்து வணங்கினார்.

பின்னர் லார்ட்ஸ் மைதானத்தில் 10 புஸ்அப் எடுத்தார் மிஷ்பா.  இந்த வயதிலும் மிஷ்பா சிறப்பாக விளையாடுவதற்கு சில ராணுவ அதிகாரிகள் கொடுத்த பயிற்சிதான் காரணமமாம். அவர்கள்தான் மிஷ்பாவுக்கு சிறப்பு பயிற்சிகள் அளித்தனராம்.  இங்கிலாந்து மண்ணில் சதமடித்தால் இதனை செய்வதாக அவர்களிடம் உறுதி அளித்திருந்தாராம். அதனை நிறைவேற்றுவதற்காக புஸ்அப் எடுத்ததாக மிஷ்பா தெரிவித்தார்.

பாகிஸ்தான் அணிக்காக 62 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள மிஷ்பா உல் ஹக்கின் 10 வது சதம் இது. இங்கிலாந்து மண்ணில் மிஷ்பா அடித்த முதல் சதமும் இதுதான். அதுவே சாதனை சதமாகவும் அமைந்து விட்டது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.