Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 13, 2016

மினிஸ்டோரி! - மனம் மாறிய திருடர்கள்!


ஈரான் நாட்டில் சகீ என்பவர் வாழ்ந்து கொண்டிருந்தார். அப்போது ஈராக் நாட்டில் உள்ள பாக்தாத் நகரத்தில் சிறந்த பல்கலைக்கழகம் ஒன்று இருந்தது. சகீ, அந்த பல்கலைக் கழகத்தில் உயர்தரக் கல்வி பயில்வதற்காகப் புறப்பட்டார்.
ஈராக் நாட்டிற்குப் புறப்பட்ட சகீ, ஓர் ஒட்டக வியாபாரிகளின் கூட்டத்தோடு சேர்ந்து புறப்பட்டுச் சென்றார். அவ்வாறு சென்ற போது வழியில் உள்ள காட்டில் திருடர்கள் அவர்களைத் தாக்கினர்.
அப்போது சகீ தம்மிடமிருந்த புத்தகங்களையும், பணத்தையும் திருடர் தலைவனிடம் கொடுத்து, ""இவற்றை நல்ல வழியில் பயன்படுத்த வேண்டும்!'' என்று கேட்டுக் கொண்டார். அவருடைய வேண்டுகோள், திருடர் தலைவனுக்கு வியப்பை உண்டாக்கியது. அதுவரையில் அவர்களால் திருடப்பட்டவர்களில், எவருமே அவர்களிடம் அவ்வாறு கேட்டுக் கொண்டதில்லை.
வியப்படைந்த திருடர் தலைவன், சகீயை நோக்கி, ""நல்ல வழியில் புத்தகத்தையும், பணத்தையும் எவ்வாறு பயன் படுத்தலாம்?'' என்று அன்புடன் கேட்டான்.
அதற்கு, ""ஒரு நல்ல பக்திமானாகிய பெரிய அறிஞரை அமர்த்தி, அவர் மூலம் இப்புத்தகங்களை உங்கள் குழந்தைகளுக்குக் கற்பியுங்கள். அவ்வாறு செய்தால், அக்குழந்தைகள் திருடுவது பெரும் பாவம் என்று உணர்ந்து, உங்களை நல்வழிக்குக் கொண்டு வந்து இறைவன் பக்கம் திருப்புவர்'' என்று கூறித் தெளிவுப்படுத்தினார் சகீ.
அதைக் கேட்டவுடன் திருடர்களும், அவர்களது தலைவனும் வெட்கப்பட்டுத் தலைகுனிந்தனர். தங்கள் பாவச் செயல் களுக்காக இறைவனிடம் மன்னிப்புக் கேட்டனர். இனி திருடுவதில்லை என்ற உறுதியும் எடுத்து கொண்டனர். அவ்வாறே வாழ்ந்தும் வந்தனர்.
***

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.