நூரதன் கூலி வேலை செய்து வந்தான். அவன் வசித்து வரும் கிராமத்தில் அவனுக்கு வேலை எதுவும் கிடைக்காததால், பக்கத்து ஊருக்கு வேலைக்கு சென்றான். அதனால், தினமும் பொழுது விடிந்ததும், பக்கத்து ஊருக்குப் புறப்பட்டு விடுவான். அவன் போகும் பாதையில், ஒரு காடு குறுக்கிடும். அந்தக் காட்டில் ஒரு சிதிலமடைந்த கோவில் இருந்தது.
தினமும் கோயிலில் நின்று, "இன்று வேலை கிடைக்க வேண்டும். வேலை கிடைத்தால் போதாது, கூலியும் இன்றே கிடைக்க வேண்டும். இன்றைய பொழுது எந்தப் பிரச்னையும் இல்லாமல் செல்ல வேண்டும்!' என்று வேண்டிக்கொள்வான்.
அன்றும் வழக்கம் போல் கோவில் வாசலில் நின்று கும்பிட்டு, வேலைக்கு செல்ல கிளம்பினான்.
""வரதா! வரதா!''
யாரோ அழைக்கும் சத்தம் கேட்டு திரும்பினான்.
"இந்தக் காட்டில் யார் தன்னை அழைக்கப் போகின்றனர். பிரமையாக இருக்கும்' என்று நினைத்து குரலைப் பொருட்படுத்தாமல், நடையைக் கட்டினான்.
""ஏய் வரதா உன்னைத்தான். கூப்பிடுவது காதில் விழவில்லையா? இங்கே வா,'' என்று அந்த குரல் மீண்டும் ஒலிக்கவே, திரும்பிப் பார்த்து நின்றான்.
""நான்தான் அழைத்தேன். இந்தக் கோயிலில் குடி கொண்டுள்ள இறைவன்தான் பேசுகிறேன். உனது பக்தியை மெச்சினேன். உனக்கு இனி நல்ல காலம் பிறந்துவிட்டது. உன் கஷ்டம் தீரப்போகிறது. அதோ அந்தப் பாறையை நகர்த்து. அதன் கீழ், ஒரு பானை நிறைய தங்கக் காசுகள் உள்ளன. எடுத்துச்செல்... அதைக் கொண்டு உன் வறுமையைப் போக்கி, மகிழ்ச்சியாக இருந்து கொள்,'' என்று குரல் ஒலித்தது.
நம்பிக்கை இல்லாமல் பாறையை நகர்த்தினான். என்ன ஆச்சரியம்! பாறையின் கீழ் ஒரு பானை, பானை நிறைய தங்கக் காசுகள். பெரிய அளவில் இல்லை. துவரம் பருப்பு அளவில்தான் இருந்தன. இரு கையால் அள்ளிப் பார்த்தான். அதன் ஒளி கண்ணைப் பறித்தது. அப்படியே பானையோடு எடுத்துச் செல்ல வேண்டாம். மற்றவர்கள் பார்த்தால், என்ன ஏது என்று கேட்பார்கள். அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டும். உண்மை ஊருக்குத் தெரிந்து விடும். எனவே, துண்டை விரித்து அதில்கொட்டி, மூட்டையாகக் கட்டிக் கொள்வோம். துணி மூட்டையை பற்றி யாரும் பெரிதாக நினைக்க மாட்டார்கள். பகல் சாப்பாடாக இருக்கலாம் அல்லது அரிசி, பருப்பு என்று திட்டமிட்டான்.
மீண்டும் குரல் ஒலித்தது. ""முழுவதையும் எடுத்துக் கொள்ளாதே! பானையில் ஒரு கைப்பிடி அளவு போட்டு விட்டு, மீதியை மட்டும் எடுத்துச் செல்,'' என்று குரல் ஒலித்தது.
வரதனுக்கு பானையில் ஒரு கைப்பிடி போட மனமில்லை. எண்ணி நான்கே நான்கு காசுகளை மட்டும் அதில் போட்டுவிட்டு, மீதியை துண்டில் கட்டிக் கொண்டான். பாறையை நகர்த்தி பழையபடி பானையை மறைத்து வைத்துவிட்டு சென்றான்.
இப்படியே வேலைக்கு செல்லாமல், வீடு திரும்பி விடலாமா என்று கூட முதலில் நினைத்தான். பின்னர், "ஏன் வேலைக்கு செல்லாமல் திரும்பி விட்டாய் என்று கேட்பார்கள். ஏதாவது பொய் சொல்ல வேண்டும், எதற்கு வீண் வம்பு... வழக்கம் போல், இன்று மட்டும் வேலைக்குச் செல்வோம்' என்று நினைத்து வேலைக்குச் சென்றான்.
வேலைக்குச் சென்ற வீட்டின் கூரையில் மூட்டையை கட்டித் தொங்கவிட்டு, வேலை செய்ய ஆரம்பித்தான். அவனுக்கு பகல் சாப்பாடு அந்த வீட்டுக்காரரே போட்டு விடுவார். அவர் சமையல் ஆரம்பித்த போது பார்த்தால், துவரம் பருப்பு இல்லை. பருப்பு இல்லாமல் எப்படி சாம்பார் வைக்க முடியும்! எனவே பருப்பு வாங்க கடைக்குப் புறப்பட்டார்.
வெளியே வந்தால் கூரையில் ஏதோ முடிச்சு தொங்கிக் கொண்டிருந்தது. "ஒரு நாளும் இல்லாமல் இன்று என்ன முடிச்சு?' வியப்பை அடக்க முடியாமல், ""வரதா இது என்னடா புதுசா முடிச்சு?'' என்று கேட்டார்.
என்ன சொல்வது? தங்கம் என்று சொல்ல முடியுமா? அதனால், ""துவரம்பருப்பு,'' என்று வாய்க்கு சொல்லிவிட்டு, வேலை செய்ய ஆரம்பித்தான்.
வீட்டு எசமானனோ, "நல்லதாகப் போயிற்று. கடைக்குப் போய் துவரம் பருப்பு வாங்க வேண்டாம். இதிலிருந்து ஒரு கைப்பிடி எடுத்துக் கொள்ளலாம்' என்று மூட்டையை அவிழ்த்தார். துவரம் பருப்பு அளவில் அத்தனையும் தங்க நாணயங்கள்.
"படுபாவி, தங்கத்தைப் போய் துவரம் பருப்பு என்று பொய் சொல்லிவிட்டானே! இவனுக்கு ஏது இவ்வளவு தங்கம்! எங்காவது திருடியிருப்பான். முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும்' என்று நினைத்துக் கொண்டு மளிகைக் கடைக்கு உடனே ஓடினார். துவரம் பருப்பை வாங்கி வந்தார். தங்கத்தை எடுத்து வைத்துக் கொண்டு துவரம் பருப்பை துணியில் கொட்டி கட்டித் தொங்கவிட்டார்.
மாலை வந்தது. வேலை முடிந்தது வரதன் வீடு திரும்புமுன் ஆசையுடன் மூட்டையைப் பிரித்துப் பார்த்தான். ஒரு தங்கக் காசு கூட இல்லை. அவ்வளவும் வெறும் துவரம் பருப்பு.
""ஐயோ சாமி! இது நிறைய பொன் காசுகளாக வைத்திருந்தேன். இப்போ பார்த்தா துவரம் பருப்பா இருக்கே சாமி... என் பொன் காசுகளை கொடுங்க சாமி,'' என்று கெஞ்சினான்.
""வரதா உனக்கு என்ன பைத்தியம் பிடிச்சிருக்கா? உனக்கு ஏதுடா அவ்வளவு தங்கக் காசு? மூட்டையில் என்னன்னு நான் கேட்டபோது கூட நீ துவரம் பருப்புன்னு தானே சொன்னே! இப்போ வந்து தங்கக் காசுன்னு கதை விடுறியே... உனக்கு என்ன ஆச்சு? நேற்று வரை நல்லாத் தானே இருந்தே,'' என்று எதுவும் தெரியாதது போல் சாதித்து விட்டார்.
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்று நொந்துக் கொண்டான் வரதன்.
திரும்பவும் அதே கோயிலில் வந்து இறைவனிடம் முறை யிட்டான்.
""உனக்குக் கொடுத்து வைத்தது அவ்வளவுதான். பானையில் போட்டதையாவது எடுத்துக் கொண்டு போ,'' என்று குரல் ஒலித்தது.
பானையில் எண்ணி நாலே நாலு காசுதான் போட்டிருந்தான். "ஐயோ... முதலிலேயே இதில் ஒரு கையளவு போட்டிருக்கலாமே!' என்று இப்போது நினைத்து வருந்தி என்ன பயன்? யாருக்கு எவ்வளவு ஒட்டுமோ அதுதான் ஒட்டும் போலும் என்று நினைத்து நொந்துப் போனான்.
***

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.