Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 11, 2016

கூடங்குளம் 2வது அணு உலையில் மின் உற்பத்தி தொடக்கம்


கூடங்குளம் 2வது அணு உலையில் அடுத்த 48 மணிநேரத்தில் மின் உற்பத்தி தொடங்கும் என அணுமின் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கூடங்குளம் அணு மின்நிலைய வளாகத்தில் உள்ள முதலாவது அணுஉலையானது, கடந்த பிப்ரவரி 22ம் தேதி முதல் 1000 மெகாவாட் மின்உற்பத்தியை செயல்படுத்தி வருகிறது.

இரண்டாவது அணுஉலைக்கான கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து, அதில் எரிபொருள் நிரப்பும் பணியும் நிறைவடைந்தது. அந்த அணுஉலையை செயல்படுத்துவதற்கு முன்பாக நீராவி வெளியேற்றும் சோதனை உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு சோதனைகளும் அதிகாரிகளின் மேற்பார்வையில் கடந்த சில வாரங்களாக  நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இரண்டாவது அணு இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இதுதொடர்பாக கூடங்குளம் அணுமின் நிலைய அதிகாரிகள் தெரிவிக்கையில், ''கூடங்குளம் இரண்டாவது அணு உலையில் அணுப்பிளவு தொடர்வினை ஆயத்தப்பணிகள் இன்றிரவு 7.52 மணிக்கு தொடங்கியது. அடுத்த 48 மணி நேரத்திற்குள் இந்த அணு உலையில் இருந்து மின்சாரம் உற்பத்தியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது'' என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.