மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, தனது சொத்துப்பட்டியலை அறிவித்துள்ளார். வெளிப்படைத்தன்மை வேண்டுமென்பதற்காக அனைத்து மத்திய அமைச்சர்களும் தங்கள் சொத்து மதிப்பை வெளியிட வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி முதல் ஆளாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, தனது சொத்து மதிப்பை வெளியிட்டுள்ளார். அவரது சொத்து மதிப்பு பிரதமர் அலுவலக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், தற்போது அருண் ஜெட்லியின் சொத்து மதிப்பு குறைந்துள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் அவரது சொத்து மதிப்பு ரூ.67.1 கோடியாக இருந்துள்ளது. தற்போது அது ரூ.60.99 கோடியாக குறைந்துள்ளது. அதாவது 8.9 சதவீதம் அவரது சொத்து மதிப்பு சரிவு கண்டுள்ளது. அவரது வங்கி கணக்கில் இருந்து கடந்த 2015ம் ஆண்டு ரூ.3.52 கோடியும், 2016 ம் ஆண்டு ஒரு கோடி ரூபாயும் குறைந்துள்ளது.
அருண் ஜெட்லிக்கு டெல்லி, ஹரியானா, குஜராத், பஞ்சாப் மாநிலங்களில் சொத்துக்கள் உள்ளன. அருண் ஜெட்லி, எந்த மியூச்சுவல் ஃபண்டிலும் இன்வெஸ்ட் செய்யவில்லை. இம்ப்ரோ எண்ணெய் நிறுவனத்தில் 16 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளார். ஹெச்.டி.எப்.சி மற்றும் ஸ்டேட் வங்கியில் அவருக்கு சேமிப்பு கணக்கு உள்ளது.
அருண் ஜெட்லி, சொந்தமாக 2 மெர்சிடெஸ் கார்களை வைத்துள்ளார். ஒரு டொயாட்டோ ஃபார்ச்சூனர், ஹோண்டா அக்கார்ட் கார்களையும் வைத்திருக்கிறார். கடந்த நிதியாண்டில் அவரிடம் பிஎம்டபிள்யூ கார் இருந்தது. இந்த நிதியாண்டில் அதனை விற்று விட்டார். இவருடன் சேர்த்து,13 அமைச்சர்கள் தங்களது சொத்து மதிப்பை வெளியிட்டுள்ளனர். உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், மேனகா காந்தி ஆகியோர் பெயர்கள் சொத்து பட்டியலை வெளியிட்ட மத்திய அமைச்சர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.