Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 11, 2016

ரஷ்ய ராணுவ ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியது ஐஎஸ்ஐஎஸ்( வீடியோ )


சிரியாவில் ராணுவ ஹெலிகாப்டரை ஐ.எஸ். அமைப்பினர்  சுட்டு வீழ்த்தியதில் ரஷிய விமானிகள் 2 பேர் பலியாகினர். அந்த வீடியோ காட்சியை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது.

     
சிரியாவில் ஐ.எஸ்.அமைப்புத் தீவிரவாதிகள் மீது வான் வழித் தாக்குதல் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது.  அமெரிக்க, ரஷியா உள்ளிட்ட நாடுகள், ஐஎஸ் இயக்கத்தின் இடங்களை அடையாளம் கண்டு தாக்குதல் நடத்தி வருகின்றன. சிரியாவின் பழமை வாய்ந்த நகரான பல்மைரா ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

எனினும் அந்த நகரின் ஒரு பகுதி ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தின் கட்டப்பாட்டில்தான் இருக்கிறது. அந்தப் பகுதியில் தாக்குதல் நடத்துவதற்ககாக  ரஷ்யாவின் எம்.ஐ.25- ரக ஹெலிகாப்டர் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை பல்மாராவுக்கு சென்றது. வானில் பறந்து கொண்டிருந்த அந்த ஹெலிகாப்டரை ஐ.எஸ். பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தினர்.  அந்த ஹெலிகாப்டரை ரஷிய விமானிகள் 2 பேர் இயக்கியதாகவும் அவர்கள் இருவரும் கொல்லப்பட்டு விட்டதாக சிரியா ராணுவம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.