Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 24, 2016

சிறையில் பியூஷ் மீது தாக்குதல்: தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!


சமூக செயற்பாட்டாளர் பியூஷ் மனுஷ், போலீஸாரால் சிறையில் தான் கடுமையாக தாக்கப்பட்டதாக கூறிய புகாரில் தேசிய மனித உரிமை ஆணையம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மக்களிடம் முறையாக நோட்டீஸ் வழங்காமல், சேலம் முள்ளுவாடி பகுதியில் பாலம் கட்டும் பணிகளை மேற்கொண்டதாகக் கூறி சேலம் மக்கள் குழுவினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து  ஆர்ப்பாட்டம் செய்தனர். இதையடுத்து இந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பியூஷ் மனுஷ் உள்ளிட்ட சிலரை கடந்த ஜூலை 8 ந்தேதி கைது செய்தார்கள் சேலம் போலீஸார்.

இதனிடையே கடந்த  20ந்தேதி பியூஷ் மனுஷின் ஜாமீன் மனுவை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. ஜாமீனில் விடுதலையான அவர், பத்திரிகையாளர்களிடம், சிறையில் தன்னை 30 காவலர்கள் சேர்ந்து அடித்து துன்புறுத்தியதாக புகார் தெரிவித்தார்.

இதுகுறித்து புகார் பதிவு செய்துகொண்ட தேசிய மனித உரிமை ஆணையம், இதுதொடர்பாக விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 2 வாரத்திற்குள் தமிழக டி.ஜி.பி மற்றும் தலைமைச் செயலாளர் இருவரும் பதிலளிக்க அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.