புதுப்பட்டினம் என்ற ஊரில் மிகப் பெரிய பணக்காரன் ஒருவன் இருந்தான். அவனிடம் இல்லாதது என்று எதுவுமே இல்லை. எல்லாமே இருந்தன. தங்கம், வெள்ளி, நவரத்தினங்கள், அழகிய வீடு, வாசல், அன்பான மனைவி, நல்ல குழந்தைகள், சிறந்த நண்பர்கள் என்று எல்லா வசதிகளும் இருந்தன. ஆனாலும் அவன் சந்தோஷமாக இல்லை.
ஏதோ ஓர் இனமறியாத கவலை அவனை வாட்டி வதைத்தது. மனதில் சந்தோஷமின்றி அலைந்தான். அவன் பணக்காரத் தன்மையைக் கண்ட சிலர் அவனிடம் நட்பு கொண்டனர். தீய வழிகளில் ஈடுபடுத்தினர். மது, மங்கை, சூதாட்டம் போன்ற எல்லாவற்றுக்கும் அழைத்துச் சென்று அவன் மனதைச் சந்தோஷப்படுத்த முயன்றனர்.
ஆனால், எதிலும் அவன் சந்தோஷத்தை அடையவில்லை. மனம் நிம்மதி இழந்திருந்தது. ஒரு சிலர் இடமாறுதல் நல்ல பலன் தரும் என்று சொல்லி, அவனை வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்று கண்ணுக்கினிய காட்சிகளைக் காட்டினர்.
ம்ஹூம்... எதனாலும் அவன் மனம் சந்தோஷம் அடையவில்லை. அந்த நேரத்தில் அவனுடைய ஊருக்கு ஒரு யோகி வந்தார். சன்னியாசிகள் நினைத்தால், மன அமைதி உண்டாக்கலாம் என்று யாரோ சிலர் சொல்ல, அவன் தன் செல்வங்களை எல்லாம் ஒரு மூட்டையாகக் கட்டிக் கொண்டு யோகியின் முன் சென்று நின்றான்.
""சுவாமி... இதோ நீங்கள் பார்க்கும் இந்த மூட்டையில் என்னுடைய சொத்துக்கள் எல்லாவற்றையும் வைத்திருக்கிறேன். இதைத் தங்களிடம் ஒப்படைக்கிறேன். அதற்கு மாறாக நீங்கள் தயவு செய்து எனக்கு மன அமைதியையும், சந்தோஷத்தையும் தர வேண்டுகிறேன்!'' என்று கூறினான்.
யோகி அந்த மூட்டையைப் பிரித்தார். வைரங்களும், வைடூரியங்களும், பொன்னகைகளும் மின்னின. இதைக் கண்ட யோகி மூட்டையை மீண்டும் கட்டினார். அவன் கேள்விக்கு எந்தப் பதிலும் சொல்லாமல் தன் தலையில் அதை வைத்துக் கொண்டு ஓட ஆரம்பித்தார்.
"என்ன இது... பணத்தையும், செல்வத்தையும் பார்த்தவுடன் யோகி அதை எடுத்துத் தலையில் வைத்துக் கொண்டு ஓடத் துவங்கி விட்டாரே... இவர் உண்மையிலேயே யோகியா... யோகி போன்ற வேடத்திலிருக்கும் போலிச் சன்னியாசியா? என்ன கொடுமை! நான் மகான் என்று எண்ணி ஒரு திருடனிடம் பணத்தைக் கொடுத்து விட்டேனே... ஐயோ! என் செல்வம் போயிற்றே!' என்று எண்ணினான்.
அடுத்த விநாடி யோகியைத் துரத்திக் கொண்டு ஓட ஆரம்பித்தான். யோகியின் ஓட்டமோ தேர்ந்த ஓட்டப் பந்தய வீரனின் ஓட்டத்தைப் போலிருந்தது.
மூட்டையுடன் அங்குமிங்கும் ஓடினார். ஒரு மணி நேரத்துக்குப் பின் தான் எங்கிருந்து ஓட்டத்தை ஆரம்பித்தாரோ அதே இடத்துக்கே வந்து சேர்ந்தார்.
பணக்காரனும் அங்கே வந்து நின்றான்.
யோகி மூட்டையைத் தொப்பென்று அவன் முன் போட்டார். பின் ""பயந்து போய் விட்டாய் இல்லையா? உன்னுடைய பணத்தையும், பொருளையும் நீயே வைத்துக் கொள்... எனக்கு வேண்டாம்,'' என்று சொன்னார்.
பணக்காரன் இதை எதிர்பார்க்கவில்லை. தனக்கு வராது என்று எண்ணிய தன் பொருட்கள் தனக்கே திருப்பிக் கிடைத்தது கண்டு, பயந்தே தன் செல்வத்தைக் திருடன் தன்னிடம் ஒப்படைத்து விட்டான் என்று எண்ணியவுடன் அவன் மீது அவனுக்கே கர்வம் பிறந்தது.
""அன்பனே, நீ இங்கே வருவதற்கு முன்னால் உன்னிடம் இதே பொருட்கள்தான் இருந்தன. என்னிடம் ஒப்படைக்கும்போதும் இதே பொருட்கள் தான் இருந்தன. அப்போதெல்லாம் உன் மனதில் சந்தோஷம் இல்லை. நான் இதை எடுத்துக் கொண்டு ஓடிச் சென்று பின் உன்னிடமே ஒப்படைத்ததும் உன் பொருட்கள்தான். இருந்தாலும் உன் மனதில் ஏகப்பட்ட சந்தோஷம் வந்துவிட்டது.
""ஒன்றை மட்டும் தெரிந்துகொள். சந்தோஷத்தை எப்போதும் வெளியிலிருந்து வாங்க முடியாது. அது நம் மனதில்தான் இருக்கிறது என்பதை நீ புரிந்து கொள்ள வேண்டும்,'' என்றார் யோகி.
யோகியின் அறிவுரை அவன் மனதில் நின்றது. தவறாக பேசியதற்கு மன்னிக்கும்படி வேண்டி விடை பெற்றான் பணக்காரன்.
***

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.